சூறாவளி: வாழை சேதம்!

Webdunia
வியாழன், 30 அக்டோபர் 2008 (11:38 IST)
வேலூர ்: திருப்பத்தூர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

திருப்பத்தூர் பகுதியில் சமீபத்தில் மழ ை, சூறாவளி காற்று அடித்தது. இதனால் வாணியம்பாடி அருகே உள்ள பள்ளத்தூர ், ஊர்கவுண்டன் வட்டம ், கொல்ல கவுண்டன் வட்டம ், மேட்டுக் கொல்ல ை, கிழக்கு வட்டம ், தலுக்கன் வட்டம் உள்ளிட்ட கிராமங்களில் வாழை மரங்கள் காற்றில் அடியோடு சாய்ந்துள்ளது.

இந்த பகுதியில் சுமார் 300 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

அத்துடன் சாகுபடி செய்த வாழைக்கு வங்கியின் மூலம் ஏற்கெனவே பெற்றுள்ள கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய பயிருக்கு கடன் வழங்க வேண்டும் என்று தமிழ்நாசு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் சக்திவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.



எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணிக்கு செல்கிறதா தேமுதிக? இரட்டை இலக்கங்களில் தொகுதிகள்?

மோடியால் பாஜகவுக்கு ஆபத்து.. பகீர் கிளப்பிய சுப்பிரமணியன் சுவாமி!

விஜய்க்கு சிபிஐ சம்மன்!.. போனாலும் பிரச்சனை... போகலானாலும் பிரச்சனை.. தளபதி சமாளிப்பாரா?!...

திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ஊழல்.. ஆளுநர் ரவியிடம் எடப்பாடி பழனிச்சாமி புகார்..!

சிறு வயதில் நிறைவேறாத காதல்: 60 வயதில் கரம் பிடித்த முதியவர்.. ஆச்சரிய தகவல்!

Show comments