நீலகிரி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக பவானிசாகர் அணையில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டத்தை பசுமையாக வைத்திருப்பதில் முக்கிய காரணமாக திகழ்வது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 120 அடியாகும்.
இதில் 15 அடி சகதியாக இருக்கும் என பொதுப்பணித்துறையால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அணையின் மொத்த நீர்பிடிப்பு உயரம் 105 அடியாகும். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த சமயத்தில் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு மிகவும் குறைந்து வினாடிக்கு ஆயிரம் முதல் ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்துகொண்டிருந்தது.
அதேசயத்தில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கீழ்நோக்கி சென்றது.
இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்திற்கு ஆதாரமாக விளங்கும் நீலகிரி மலைப்பகுதியில் குறிப்பாக ஊட்டி, கோத்தகிரி,குன்னூர் மற்றும் கூடலூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கடந்த நான்கு நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நான்கு நாட்களில் அதிகபட்சமாக வினாடிக்கு 18,650 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இன்று காலை வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் வினாடிக்கு 1,200 கனஅடி தண்ணீரும ், பவானி ஆற்றில் வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 95.35 அடியாக உள்ளது. கடந்த நான்கு நாட்களில் நான்கு அடி தண்ணீர் உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது.