Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட‌கிழ‌க்கு பருவ மழை தீவிரமடையும் - மழைராஜ்!

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2008 (21:49 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரமடையும் என்றும், இதனால் மழை மேலும் தீவிரமாக பெய்யும் என்று மழை குறித்து ஆய்வு செய்து வரும் மழைராஜ் கூறியுள்ளார்!

வடகிழக்கு பருவ மழை குறித்து மழைரா‌ஜ் மேலும் கணித்து அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில்,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, சேலம், தர்மபுரி, கொடைக்கானல் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் 25 முதல் 29ஆம் தேதி வரை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் தமிழகத்தில் கடலூர், புதுச்சேரி, ஆந்திராவின் கம்பம் பகுதியிலும் கூடுதல் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 2 முதல் 5ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மழைராஜ் கூறியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே துவங்கும் என கணித்து கூறியபடி, அக்டோபர் மாதம் 11ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது என்றும் மழைராஜ் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

துப்பாக்கி வேல செய்யல இக்பால்..? கவுன்சிலரை சுட வந்தவருக்கு நடந்த ட்விஸ்ட்! - வைரலாகும் வீடியோ!

இஸ்ரேல் பிரதமர் வீட்டில் வெடிகுண்டு தாக்குதல்... ஒரே மாதத்தில் 2 முறை கொலை முயற்சி?

சென்னைக்கு ஒரு வாரம் மழை இல்லை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Show comments