Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணெய் வித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (14:25 IST)
கோவ ை: விவசாயிகளிடம் இருந்து எண்ணெய் வித்துக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன் மாநில தலைவர் டி.வேலாயும் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் வித்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 7.75% இறக்குமதி வரியை, மத்திய அரசு குறைத்ததுள்ளது. அத்துடன் தாவர எண்ணெய்களின் மீதான இறக்குமதி வரியையும் முழுவதும் ரத்து செய்துள்ளது.

இதனால் முந்தைய ஆண்டுகளைவிட 2007-08 ஆம் ஆண்டில் இது வரை இல்லாத அளவிற்கு 70 லட்சம் டன் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

அரசு எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக சலுகைகள் அளித்து விளைச்சலை ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் விவசாயிகளிடம் இருந்து, எண்ணெய் வித்துக்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம்.. சரிவில் பங்குச்சந்தை..!

ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை நிலவரம்..!

திருப்பதியில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து.. என்ன காரணம்?

Show comments