Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழை உற்பத்தி கருத்தரங்கம்!

Webdunia
திருச்ச ி: தரமான வாழை உற்பத்தி பற்றிய கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற உள்ளது இந்த கருத்தரங்கம் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெறுகின்றது.

இதை பன்னாட்டு தாவர மரபியல் வள நிறுவனம ், வாழை மேம்பாட்டுக்கான பன்னாட்டு அமைப்ப ு, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

இந்த கருத்தரங்கு பற்றி மைய இயக்குநர் எம்.எம். முஸ்தபா கூறுகையில், இந்த 3 அமைப்புகளும் இணைந்து திருச்சி பிரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் அக். 20-ம் தேதி தாவர வகைப்பாட்டியல் ஆலோசனைக் குழுக் கூட்டத்தை தொடங்குகிறது.

இந்த கூட்டம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும். இதில் 13 நாடுகளிலிருந்து 16 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இதனிடைய ே, வாழை உற்பத்தி மற்றும் பயன்பாட்டு மேம்பாட்டுக்கான சங்கமும ், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையமும் இணைந்து "உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைக்கான தரமான வாழை உற்பத்த ி' என்ற பன்னாட்டுக் கருத்தரங்கத்தை அக்டோபர் 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் நடத்துகின்றன.

இந்தக் கருத்தரங்கை இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தோட்டக்கலை இணை இயக்குநர் தொடக்கிவைக்கின்றார்.

இந்த கருத்தரங்கில் 30 நாடுகளிலிருந்து 40 பிரதிநிதிகளும், 300 வாழை ஆராய்ச்சியாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கம் ஏற்றுமதித் தரத்தில் வாழை உற்பத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாட ஒரு வாய்ப்பாக அமையும ் என்று முஸ்தபா தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments