Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை- நெற் பயிர்கள் பாதிப்பு!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (13:52 IST)
நாகர்கோவில ்: கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நண்பகல் வரையில் இடைவிடாது பெய்தது.இதனால் பல இடங்களில் நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த மழையின் காரணமாக நெல் சாகுபடி செய்த வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கொட்டாரத்தில் 41.6 மி.மீ. மழை பெய்தது.

இதே போல் பேச்சிப்பாறை அணை 13, பெருஞ்சாணி அணை 20.2, சிற்றாறு 1 அணை- 17, சிற்றாறு 2 அணை- 7, முக்கடல் அணை 24, சுருளோடு 23.2, பூதப்பாண்டி- 13.8, கன்னிமார் 28.5 நாகர்கோவில் 15.7, மயிலாடி 14.4, ஆரல்வாய்மொழி 26.4 மி. மீ பதிவாகியுள்ளதாக பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கனத்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்த வயல்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால ், பல்வேறு பகுதிகளில் முற்றிய நெற்கதிர்கள் சாய்ந்துக் கிடக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

Show comments