Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் நெற் பயிர் பாதிப்பு!

Webdunia
புதன், 15 அக்டோபர் 2008 (10:11 IST)
கடலூர ்: கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமா க, சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரால், காட்டுமன்னார்கோவில ், சிதம்பரம் தாலுகாக்கள், கடலூர் தாலுகாவில் சில கிராமங்கள் பாசன வசதி பெறுகிறது.

வடகிழக்கு பருவமழை காலதாமதமாக தொடங்கினாலும், இந்த மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாகப் மழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் ஏக்கரில் நெல் நாற்று நடம் பணி நடக்க வேண்டும்.

இந்த நிலையில் இங்கு கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் மழையால ், ஒரு வாரத்திற்கு முன்பு நடவு முடிந்த வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பயிர் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

இது குறித்து கொள்ளிடம் கீழ் அணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி கூறியது:

இந்த மாவட்டத்தில் காவிரி நீர் பற்றாக்குறையால ், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நாற்று நடவேண்டியது உள்ளது. திருநாரையூர ், சர்வராஜன் பேட்ட ை, செங்கழுநீர்ப் பள்ளம ், சிறகிழந்த நல்லூர ், கண்டமங்கலம ், குறுங்குட ி, எடையாறு உள்ளிட்ட கிராமங்களில ், ஒருவாரமாக நடப்பட்ட 10 ஆயிரம் ஏக்கரில் தண்ணீர் தேங்க ி, பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த வருடம் காவிரி நீர் தாமதம் ஆனதால ், கடைமடைப் பகுதிகளில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் ஒரு வாரத்திற்கு முன்பு தான் சம்பா நெல் நடவு தொடங்கி உள்ளது.

இதில் நடவு முடிந்துள்ள சுமார் 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் மழைநீர் தேங்கி பயிர் மூழ்கிக் கிடக்கின்றன.

வயல்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் உள்ளிட்ட 30 ஆயிரம் ஏக்கரில் இன்னும் நாற்று நடவு தொடங்க வில்லை.

தற்போது பெய்து வரும் மழை தொடர்ந்து நீடித்தால், நடவு பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments