Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம்!

Webdunia
செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:55 IST)
தென்காச ி: தோட்டக்கலை பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க ஆகும் செலவில் அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது என்று தென்காசி தோட்டக்கலை உதவி இயக்குநர் சே.மதியழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது.

பழமரங்கள ், காய்கற ி, மலர், வாசனை திரவிய பயிர்கள், தென்ன ை, கரும்பு போன்றவற்றை பயிர் செய்யும் விவசாயிகள், இந்த பயிர்களுக்கு தேவைப்படும் நீர்ப்பாசனத்திற்காக, சொட்டுநீர் பாசன வசதி அமைப்பதற்கு அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது.

இதை அமைக்க ஆகும் செலவில் மீதமுள்ள 50 விழுக்காடு தொகை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் கடனாகவும் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைப்பதால ், தண்ணீர் இல்லாமல் பயிர் வாடுவதை தவிர்த்து தேவைகேற்ப நீர்ப்பாசனம் செய்திடலாம்.

தோட்டக்கலை துறை மூலம் சொட்டுநீர் பாசனம் அமைக்க மாமரம், நெல்ல ி, கொய்ய ா, எலுமிச்சை, முந்திரி, வாழ ை, மலர்கள ், கரும்புப், நறுமண மூலிகை பயிர்கள் ஆகியவைகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசன வசதி செய்ய விரும்பும் தென்காசி வட்டார விவசாயிகள், தென்காசி உழவர்சந்தை வளாகத்திலுள்ள தோட்டக் கலை உதவி இயக்குநரை சந்தித்து பயன்பெறலாம் என்று கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments