Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் பயிர்க் காப்பீட்டு நிவாரணம்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (13:42 IST)
விரைவில் பயிர்க் காப்பீட்டு நிவாரணம ்!

திருவாரூர ் : திருவாரூர் மாவட்டத்தில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு (2007-08) காப்பீடு செய்து கொண்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பு தொகை வழங்கப்படும்.

இந்த ஆண்டு (2008-2009) தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்ய அனைத்து வட்டாரங்களிலும் பிர்கா மற்றும் சாகுபடி பயிர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்ட விவரங்களை அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம்.

அனைத்து சிற ு, குறு விவசாயிகள ், பெரு விவசாயிகள ், குத்தகைதாரர்கள ், கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறாதவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம்.

தொடங்கியுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு கடன்பெறும் விவசாயிகளுக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் மாத இறுதி வரை பயிர்க் காப்பீடு செய்து கொள்ள தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் இறுதி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும ், சம்ப ா, தாளடி நெற்பயிர்களுக்கு காப்பீடுத் தொகைக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியத் தொகை 2 விழுக்காடு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு 50 விழுக்காடு மானியம் வழங்குகிறது. கடன் பெறாத சிற ு, குறு விவசாயிகளுக்கு 55 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.

எனவ ே, கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறாத விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர்ந்து இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடு செய்ய நிதியுதவி பெற்று பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் எம்.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments