Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் - மழைராஜ்!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (18:54 IST)
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும ், இன்னும் ஓரிரு நாட்களில் வடகிழக்கு பருவ மழை துவங்கலாம் என்றும் மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் தெரிவித்துள்ளார்!

இதுகுறித்து பெரம்பலூர் மழைராஜ் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவத ு:

இரண்டு வாரங்களில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ளதாக கடந்த 19ஆம் தேதி தெரிவித்திருந்தேன். தற்போதைய வானிலை கணிப்பின்படி ஓரிரு நாட்களில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்க வாய்ப்புள்ளது.

தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் சூழ்நிலை உள்ளதால், அது வலுவடைந்து வடகிழக்கு பருவ மழையாக மாறும் வாய்ப்புள்ளது.

இதனால் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, சேலம், தருமபுரி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் திருவாரூர், திருச்சி, தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

அக்டோபர் மாதம் 4, 5, 6, 7, 10, 13, 14, 16-19 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ள தேதிகளாகும். கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவ மழை அதிக அளவு பெய்ய வாய்ப்புள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments