Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கறிக்கோழி நுழைவு வரியை குறைக்க கோரிக்கை!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:37 IST)
பல்லடம ்: தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் கறிக்கோழிகளுக்கு கேரளாவில் வசூலிக்கப்படும் நுழைவு வரியை குறைக்க வேண்டும் என்று கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கோழிக்கறிக்கு, கேரள அரசு 12.5 விழுக்காடு நுழைவு வரி விதித்துள்ளது. இதை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும். இந்த நுழைவு வரியால், 1 கிலோ கோழிக்கு வரியாக ரூ.5 செலுத்தப்படுகிறது.

தற்போது கேரளாவில் கறிக்கோழி பண்ணைத் தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் கேரள அரசு தமிழகத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லப்படும் கோழிகளுக்கு நுழைவு வரி விதித்துள்ளது.

இந்த வரியால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லும் கோழிகளின் விலை, உள்ளுர் கோழிகளுடன் ஒப்பிடுகையில் கிலோவுக்கு ரூ.5 அதிகரிக்கிறது. இதனால் தமிழக கோழிகளின்
விற்பனை பாதிப்படைந்துள்ளது.

இந்த பாதிப்பு குறித்து பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதிகண்ணன் கூறுகையில், கேரள அரசு தமிழக கோழிகளுக்கு விதித்துள்ள நுழைவு வரியை 4 விழுக்காடாக குறைக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் மக்காச்சோளத்துக்கு 1 விழுக்காடு வரி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments