Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க வலியுறுத்தல்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (17:30 IST)
தஞ்சாவூர ் : 2008-09 ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என்று குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை இந்த சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க தலைவர் எஸ். ராமநாதன் தலைமை வகித்தார்.

இதில் கரும்பு விலையை டன்னுக்கு ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில், பதிவு செய்யப்பட்ட கரும்புப் பயிர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டால ், பாதிப்பு ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் எவ்வித தடையுமின்றி ஆலை நிர்வாகமே கரும்புகளை ஆலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அய்யம்பேட்ட ை, திருவையாறு கோட்டங்களை ஆலையின் பதிவு பரப்புக்கு உட்பட்டே செயல்படச் செய்ய வேண்டும்.

இப்பகுதியில் தனியார் ஆலைகள் கரும்பு எடுக்க அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் பொதுச் செயலர் ஆர். திருப்பத ி, சுவாமிமலை சுந்தரவிமல்நாதன ், வீ. தருமராஜன் உள்ளிட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments