ஈரோடு: சத்தியமங்கலம் பகுதியில் வயல்வெளிகளில் மயில்கள் விளையாடுவதால் பயிர்கள் நாசமாவதாக விவசாயிகள் புகார் தெரிவ ித்துள்ளனர்.
webdunia photo
WD
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாகும். இந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக வசிக்கின்றன. இதுதவிர தமிழ்கடவுள் முருகனுடைய வாகனம் என்று வ ணங ்கப்படும் மயில்களும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது.
வனப்பகுதிக்குள் திரிந்த மயில்கள் கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்கள் உள்ள பகுதிகளில் சாதாரணமாக உலவ தொடங்கிவிட்டது. சத்தியமங்கலம் பகுதி பொதுவாக வளமான பகுதி என்பதால் எப்போதும் இங்கு விவசாயம் செழிப்பாகவே காணப்படும்.
இதனால் விவசாய நிலங்களில் விளைந்து நிற்கும் நெல்மணிகளை திண்ணவும், தக்காளி உள்ளிட்ட பழவகைகளை உண்ணவும் மயில் கூட்டங்கள் விவசாய நிலப்பகுதியில் உலவி வருகிறது. மேலும் மழைகாலங்களில் விவசாய பகுதிகளில் தோன்றும் ஈசல்களை திண்ண வயல்வெளியில் ச ாத ாரணமாக இறங்கி நாற்றுகளை மிதித்து செல்வதால் விவசாயிகளுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.
இதேபோல் சென்னிமலை மற்றும் அந்தியூர் பகுதிகளிலும் மயில்களின் தொந்தரவால் விவசாயிகள் பெரிதும் பாதித்துள்ளனர்.