Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி விலை உயரும்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (17:04 IST)
பருத்தி விலைகள் 5 விழுக்காடு வரை உயரும் என்று தெரிகிறது.

உலக சந்தையில் பருத்தி விலை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் உள்நாட்டிலும் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையை விட, பருத்தி விலை 5 விழுக்காடு வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று மத்திய அரசின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இன்டர்நேஷனல் காட்டன் அட்வைசரி கமிட்டி [ International Cotton Advisory Committee (ICAC)] இந்த வருடம் பருத்தி உற்பத்தி குறையும் என்று மதிப்பிட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் பருத்தி விலை உயரும்.

மற்ற நாடுகளில் விலை உயர்வதால், உள்நாட்டு ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு ஏற்றுமதி செய்வார்கள். இது போன்ற காரணங்களினால் உள்நாட்டிலும், அரசின் ஆதார விலையை விட, பருத்தி விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசு 2008-09 ஆம் ஆண்டு பருவத்திற்கு நீண்ட இழை பருத்தியின் ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதன் விலை சென்ற வருடம் ரூ.2,030 ஆக இருந்தது.

இதே போல் நடுத்தர இழை பருத்தியின் விலையையும் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது. இதன் விலை சென்ற வருடம் ரூ.1,800 ஆக இருந்தது.

இன்டர்நேஷனல் காட்டன் அட்வைசரி கமிட்டி 2008-09 பருவத்தில் பருத்தி உற்பத்தி 6 விழுக்காடு வரை குறையும் என்று கணித்துள்ளது. இதன் உற்பத்தி 24.7 மில்லியன் டன்னாக இருக்கும்.

பல நாடுகளில் பருத்தி சாகுபடி செய்த பகுதிகளில், வேறு பணப்பயிர்களும், உணவு தானியங்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் பருத்தி உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் பருத்தி உற்பத்தி அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த செப்டம்பரில் முடிவடையும் பருத்தி ஆண்டில் 315 லட்சம் பொதி உற்பத்தியானது.

இது அடுத்த ஆண்டு 320 லட்சம் பொதியாக (1 பொதி 170 கில ோ) அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

( பருத்தி ஆண்டு என்பது அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை).

இது குறித்து இந்திய பருத்தி கழகத்தின் [ Cotton Corporation of India] மேலாண்மை இயக்குநர் சுபாஷ் குரோவர் கூறுகையில், ஜனவரி மாதத்திற்கு பிறகு, பருத்தி விற்பனைக்கு வருவது குறையும். இதனால் விலை உயர்வதற்கு வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி உள்நாட்டு தேவைக்கு 240 லட்சம் பொதி தேவைப்படுகிறது. இந்த வருடம் 5 லட்சம் பொதி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments