Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் ஆதிவாசி விவசாயிகள்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
சனி, 6 செப்டம்பர் 2008 (12:04 IST)
ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, ஆசனூர் மற்றும் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள ஆதிவாசி விவசாயிகள் தற்போது முழுமையாக இயற்கை உரங்களை பயன்படுத்தி அதிக மகசூல் எடுத்து வேளாண்மையில் சாதனை படைத்துள்ளனர்.

webdunia photoWD
வனத்தை காக்கும் பழங்குடியினருக்கு வாழ்வாதரமே வனப்பொருள் சேகாரமும், விவசாயமும் ஆகும்.ராகி, கம்பு உள்ளிட்டவைகளை விதைத்து அதை அறுவடை செய்து தாங்கள் உணவுக்காக பயன்படுத்தி மீதமுள்ளதை சிறிய தொகைக்கு விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை ஆசையில்லாமல் ஆனந்தமாக கழித்து வந்தனர்.

ஆனால் இவர்கள் இருக்கும் இடத்திற்கு சமவெளியில் அதாவது நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் குடியேறினர். அங்கு உள்ள நிலங்களை விலைக்கு வாங்கி அங்கே "கஸ்ட் ஹவுஸ்' அதாவது விருந்தினர் விடுதி கட்டி மலைப்பகுதி மக்களின் நாகரியத்தில் அவர்களுடைய ஏதார்த்த வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தினர்.

மலைப்பகுதி கிராமங்களில் இருக்கும் ஆதிவாசி விவசாயிகளுக்கு அவர்களின் நிலங்களுக்கு நவீன உரங்களை பயன்படுத்தும் முறையையும் அறிமுகம் செய்தனர். முதலில் நல்ல விளைச்சல் கொடுத்து ஆதிவாசி விவசாயிகளை ஆனந்தமடைய செய்த அவர்களின் விளைநிலங்கள் நாளடைவில் வீரியம் குறைந்து வருவாயும் குறைய செய்தது.

இரசாயண உரங்கள் விலை அதிகரித்தது அவர்களுக்கு வரும் வருமானம் குறைந்தது. இதனால் ஆதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அவர்களுக்கு பணத்திற்கு திண்டாட்டம் ஏற்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி நகர்புறத்தில் இருந்து வந்த கந்து வட்டி பிரமுகர்கள் ஆதிவாசி விவசாயிகளுக்கு தேவையான பணத்தை வட்டிக்கு கொடுத்து அவர்கள் விளைவிக்கும் பொருள்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி கந்துவட்டி கும்பல் லாபத்தை சம்பாதித்து வந்தனர்.

webdunia photoWD
இந்த நிலையின் காரணமாக மலைப்பகுதியில் உள்ள ஆதிவாசி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு தீர்வு ஏற்படுத்த மாவட்ட வன அதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம் மற்றும் சுடர் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.சி.நடராஜ் ஆகியோர் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டனர்.

அதுதான் வனக்குழுவில் உள்ள நிதியில் இருந்து அவர்களே வட்டியில்லாத கடன்பெற்று இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைந்த பொருட்களை இடைதரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக சந்தை படுத்தும் திட்டம்.

இத்திட்டத்தின் முதல் முயற்சியாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் பவானிசாகர் வனச்சரகத்தில் உள்ள காளிதிம்பம், மாவநத்தம், பெஜலட்டி, இட்டரை, இராமரணை ஆகிய கிராம வனக்குழு உழவர்கள் 200 பேருக்கு இரண்டு டன் பீன்ஸ் விதை கிராம வனக்குழு ந ி‌ தியின் மூலம் வழங்கப்பட்டது. மேலும் சுடர் தொண்டு நிறுவனம் சார்பாக இந்த ஆதிவாசி விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி டாக்டர் கோ.நம்மாழ்வார் மூலமாக இயற்கை விவசாயம் குறித்து செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

webdunia photoWD
இதன்விளைவாக ஆதிவாசி விவசாயிகள் இரசாய ண உரங்களில் இருந்து விடுபட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள தொடங்கினர். இதன் மூலம் காளிதிம்பத்தை சேர்ந்த 36 விவசாயிகள் ரூ.19,125 செலவில் 450 கிராம் பீன்ஸ் விதை கொடுக்கப்பட்டது. இதன் மூலம் இவர்களுக்கு கிடைத்த வருவாய் ரூ.2,89,360 ஆகும். இதே அளவில் மாவநத்தம் விவசாயிகளுக்கு ஒருபடி மேலாக ரூ.2,98,150 கிடைத்துள்ளது. மொத்தம் 192 ஆதிவாசி விவசாயிகள் ரூ.12,98,190 வருமானம் ஈட்டி சாதனை படைத்துள்ளனர்.

இதுமட்டுமின்றி தாங்கள் விளைவித்த காய்கறிகளை தாங்களே நேரடியாக மேட்டுப்பாளையம் காய்கறி சந்தைக்கு சென்று நேரடி விற்பனையிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களது பணியை பார்வையிட்ட மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் விவசாயிகளையும் இதற்கு வித்திட்ட மாவட்ட வனஅதிகாரி எஸ்.ராமசுப்பிரமணியம் மற்றும் சுடர் தொண்டு நிறுவன செயலாளர் எஸ்.சி.நடராஜ் ஆகியோரை பாராட்டினர். மண்டல வனபாதுகாவலர் டி.துரைராசும் இந்த முயற்சியை பார்வையிட்டு அனைவரையும் வாழ்த்தினர்.

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

கைது செய்ய போலீஸ் சென்ற போது கதவை பூட்டி கொண்ட கஸ்தூரி.. என்ன நடந்தது?

நான் களத்தில் இறங்க தயார்..? இந்த தொகுதிதான் நம்ம டார்கெட்! - ஓப்பனா அறிவித்த பா.ரஞ்சித்!

டெல்லில இருந்து அமெரிக்காவுக்கு போக 40 நிமிடம்தான்! - ‘வேல்’ சூர்யா பாணியில் இறங்கிய எலான் மஸ்க்!

துப்பாக்கி வேல செய்யல இக்பால்..? கவுன்சிலரை சுட வந்தவருக்கு நடந்த ட்விஸ்ட்! - வைரலாகும் வீடியோ!

Show comments