Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருத்தி உற்பத்தி குறையும்!

Webdunia
வியாழன், 4 செப்டம்பர் 2008 (16:01 IST)
உலக அளவில் பருத்தி உற்பத்தி குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பருத்த ி (cotton) உற்பத்த ி குறித்து இன்டர்நேஷனல் காட்டன் அட்வைசரி கமிட்டி [ International Cotton Advisory Committee (ICAC)] என்ற அமைப்பு கண்காணித்து வருகிறது.

இது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு, அமெரிக்காவல் இந்த பருவத்தில் (2008-09) 12 லட்சம் டன் பருத்தி உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற பருவத்தில் (2007-08) 26.24 மில்லியன் டன் பருத்தி உற்பத்தியானது. (1 மில்லியன் 10 லட்சம்)

உலக அளவில் இந்த பருவத்தில் பருத்தி உற்பத்தி 24.7 மில்லியன் டன்னாக இருக்கும். இது சென்ற பருவத்துடன் ஒப்பிடுகையில் 6 விழுக்காடு குறைவு.

பல்வேறு நாடுகளில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதாலும், அதே நேரத்தில் விலை அதிகமாக இருப்பதால் பருத்தியின் பயன் 1 விழுக்காடுவரை குறையும். இதன் தேவை 26.2 மில்லியன் டன்னாக இருக்கும்.

குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ( Russia) ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், பிரேசில், துருக்கி, தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளில் பருத்தி உபயோகம் குறையும்.

அதே நேரத்தில் சீனா, வங்கதேசம், இந்தோனேஷியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் படிப்படியாக பருத்தி பயன்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இந்த பருவம் முடியும் போது பருத்தி இருப்பு 10.7 மில்லியன் டன்னாக இருக்கும். இது சென்ற ஆண்டைவிட 12 விழுக்காடு குறைவு.

பருத்திக்கு பதிலாக வேறு பணப்பயிர்கள் சாகுபடி செய்வது அதிகரித்து வருகின்றது. இதுவே பருத்தி உற்பத்தி குறைவதற்கு காரணம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments