Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயத்திற்கு மின்சாரம்- அரசுக்கு கோரிக்கை!

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (11:31 IST)
விவசாய பணிக்காக 14 மணி நேரம் இடைவிடாது மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாரதீய விவசாயிகள் சங்கம் [ Bharatiya Kissan Sangh (BKS)] தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சங்கத்தின் பொதுச் செயலர் அய்யாக்கண்ணு, விவசாயிகளுக்கு தொடர்ந்து மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

அதில், மின்சாரம் தடைபடுவதால் நீர் பாய்ச்ச முடியாமல் போகும். இதனால் வளர்ந்துள்ள நெற் பயிர்கள் வாடிப்போய்விடும். ஏற்கனவே பல காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்பால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு குறைந்தபட்ம் ரூ.7 ஆயிரம் வரை நஷ்டமாகும்.

தொழில் துறையை சேர்ந்த நிறுவனங்களை ஜெனரேட்டர் பயன்படுத்தி, அவர்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்ளுமாறு கூற வேண்டும். இதனால் சேமிக்கப்படும் மின்சாரத்தை விவசாய பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments