அணைகளில் போதிய நீர் இருப்பு!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (15:59 IST)
இந்தியாவில் உள்ள முக்கியமான 81 அணைகள் மற்றும் ஏரிகளில் அதன் மொத்த கொள் ள ளவில் 63 விழுக்காடு நீர் இருப்பில் உள்ளது என்று மத்திய நீர் வாரியம் [ Central Water Commission (CWC) ] அறிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள அணைகள், ஏரிகளில் நீர் நிலைகளின் நீர் இருப்பு, நீர் வரத்து போன்ற தகவல்களை மத்திய நீர் ஆதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நீர் வாரியம் கண்காணித்து வருகிறது.

கங்கை, இந்தூஸ், நர்மதா, சபர்மதி, மகாநதி, காவேரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளின் குறுக்கே உள்ள அணைகள், நீர் நிலைகள ி‌‌ன் கடந்த பத்து ஆண்டுகளின் சராசரி அளவை விட, அதிக அளவு தண்ணீர் உள்ளது. கட்ச் வளைகுடாவில் உள்ள மாகி நதி, தெற்கில் இருந்து மேற்கு நோக்கி பாயும் நதிகளில் சராசரி அளவு தண்ணீர் உள்ளது. தாபி, கோதாவரி நதியில் தண்ணீர் குறைவாக ஓடுகிறது.

இந்த 81 அணைகள் மற்றும் நீர் நிலைகளில் பருவ மழை தொடங்குவதற்கு முன், ஜூன் 1 நிலவரப்படி 19 விழுக்காடு நீர் இருந்தது. இவற்றில் பருவமழை பெய்துள்ளதால் நீர் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 28 ஆம் தேதி நிலவரப்படி 63 விழுக்காடு நீர் உள்ளது. (மொத்த கொள ் ளளவில்) .

மத்திய நீர் வாரியம் நீர் இருப்பு பற்றி கொடுக்கும் தகவலின் அடிப்படையில், விவசாய அமைச்சகம் உட்பட பல விவசாய அமைப்புகளுக்கு நீர் இருப்பு பற்றிய தகவலை வழங்குகிறது. இதன் அடிப்படையில் விவசாயிகள் எந்த பயிர் சாகுபடி செய்யலாம் என பரிந்துரை வழங்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி கணக்கு போடும் பிரேமலதா!.. பழனிச்சாமி முயற்சி பலிக்குமா?!.. பின்னணி என்ன?..

விஜய் பக்கம் வந்த முதல் கட்சி!.. தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்.ஆர்.காங்கிரஸ்!..

2026 சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு!.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட திமுக..

கூட்டணி பேச்சுவார்த்தை ஸ்டார்ட்!.. முதல் சீட் அந்த கட்சிக்குதான்!.. திமுக முடிவு!...

திமுக ஆட்சிக்கு வருவது உறுதி!. ஆனா இத பண்ணுங்க!.. சட்டசபையில் பேசிய செல்வபெருந்தகை!..

Show comments