Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயிர் காப்பீட்டு திட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் : வீரபா‌ண்டி ஆறுமுக‌ம்!

Webdunia
சனி, 16 ஆகஸ்ட் 2008 (15:06 IST)
ப‌யி‌ர் கா‌ப்ப‌ீ‌ட்டு ‌தி‌ட்ட ‌விவசா‌யிகளு‌க்கு ‌விரை‌வி‌ல் இழ‌ப்‌‌பீடு ‌நிவாரண‌ம் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று வேளா‌‌ண்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌ர்பா க வேளா‌ண்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ், 1999 ஆம் ஆண்டு முதல் தமிழக‌த்த‌ி‌ல ் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மத்திய அரசு நிறுவனமான இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் தேசிய வேளாண் காப்பீடு திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டு. மாநில அரசுடன் இணைந்து க ீ‌ ழ்கண்ட பயிர்களுக்கு காப்பீடு ச ெ‌ ய்யப்படுகிறது.

நெல், கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற தானியப்பயிர்கள். உளுந்து, பச்சைப் பயறு, துவரை போன்ற பயறுவகைகள ். நிலக்கடலை, எள், சூரியகாந்தி போன்ற எண்ண ெ‌ ய்வித்து பயிர்கள். கரும்பு, பருத்தி, உருளைக்கிழங்கு, மஞ்சள் வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளக ா‌ ய ் போன்ற வணிகப் பயிர்கள்.

பயிர்கடன் பெற்ற விவசாயிகள் மட்டுமே பயனடைந்து வந்த இந்த திட்டத்தில், பயிர்க்கடன் பெறாத விவசாயிகளையும் சேர்த்து, அவர்கள் செலுத்தும் பிரிமியத் தொகையில் 50 ‌விழு‌க்கா‌ட்ட ை மானியமாக வழங்கிட 2006-2007ஆம் ஆண்டில் ரூ.8 கோடியும், 2007-
2008 ஆம் ஆண்டில் ரூ.15 கோடியும், 2008-2009ஆம் ஆண்டில் ரூ.40 கோடியும் நிதி ஒதுக்கீடு ச ெ‌ ய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் பயனாக 2005ஆம் ஆண்டுக்கு ஒர ு லட்சமாக இருந்த விவசாயிகளின் எண்ணிக்கை 2006ஆம் ஆண்டு 3 லட்சமாகவும்,
2007 ஆம் ஆண்டு 5.5 லட்சமாகவும் உயர்ந்துள்ளது. 2006-2007ஆம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட
பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7.88 கோடி வழங்கப்பட்டு 10,608 விவசாயிகள் பயன்பெற்றனர்.

2007-2008 ஆம் ஆண்டில் தேசிய வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் 5.5 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டதால், பிரிமியத் தொகை மானியமாக 11.14 கோடி வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் உள்பட 19 மாவட்டங்களில் பயிர் காப்பீடு திட்டத்தின் க ீ‌ ழ ் பதிவு ச ெ‌ ய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.267.62 கோடி என இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தால் மதிப்பீடு ச ெ‌ ய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.150.53 கோடியும், சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.57.73 கோடியும், நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.27.96 கோடியும் இழப்பீடாக வழங்கபட உள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ள இழப்பீட்டுத் தொகையில் 50 ‌விழு‌க்காட ு மாநில அரசும், 50‌ ‌விழு‌க்காட ு மத்திய அரசும் ஏற்கின்றன. விவசாயிகளின் நலன் கருதி அவர்களின் பிரிமியத் தொகையில் 50 ‌விழு‌க்காட ு மானியமாக வழங்குவதுடன் மாநில அரசு செலுத்துவதுடன், அவர்களுக்கு ஏற்படும் இழப்பீட்டிலும் 50 ‌விழு‌க்காட ு மானியத்தை மாநில அரசே வழங்கி அதிக அளவிலான விவசாயிகளை இத்திட்டத்தின் மூலம் பயன்பெற ஊக்குவித்து வருகிறத ு. விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை நேரடியாக விரைவில் வழங்க உரிய நடவடிக்க ையை அரசு எடுத்து வருகிறது எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments