ஈரோடு மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தொடங்கியது. நடப்பு ஆண்டில் விலை அதிகரிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் விவசாய கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்தால் தங்கள் விலை நிலத்தில் நெல், கருப்பு, வாழை மற்றும் மல்லிகை பூ உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். கிணற்றில் தண்ணீர் குறைவாக உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தில் பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட குறிகியகாலத்தில் வரும் பயிற்களை பயிரிடுவது வழக்கம்.
குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் காங்கயம், தாராபுரம், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், பவானி மற்றும் அந்தியூர் ஆகிய பகுதிகளில் நடப்பு ஆண்டில் நிலக்கடலை அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்த பகுதிகளில் தற்போது நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ளது.
webdunia photo
WD
விதைப்பு நாளில் இருந்து 100 முதல் 110 நாட்களில் அறுவடைக்கு வரும் நிலக்கடலை கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு ஆண்டில் காய் பிடித்துள்ளதும் அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள நிலக்கடலை வயலில் மூன்று ஆயிரம் கிலோவில் இருந்து நான்காயிரம் கிலோ வரை விளைச்சல் கொடுத்துள்ளது.
அதேசமயம் கடந்த ஆண்டு கிலோ ஒன்று ரூ. 12 வரை விற்பனையான பச்சை நிலகடலை நடப்பு ஆண்டியில் கிலோ ஒன்று ரூ.13 முதல் ரூ.15 வரை விற்பனையாகியுள்ளது. விலையும் உயர்ந்து விளைச்சலும் உயர்ந்தால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.