Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேட்டூ‌ர் அணை‌க்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Webdunia
புதன், 13 ஆகஸ்ட் 2008 (13:11 IST)
கர ்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர திறந்து விடுவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வரும் நீர் கடந்த சில நாட்களாக குறைந்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 58 அடியை எட்டியது.

இந்நிலையில் நேற்று முதல் அணைக்கு அதிக அளவு நீர் வந்து கொண்டுள்ளது.

கர்நாடகா மாநில அணைகள் நிரம்பி வழிவதால், அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இன்று காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இது மாலைக்குள் 30,000 கனஅடியாக உயரும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 60.35 அடியாக இருந்தது. அணையின் மொத்த உயரம் 120 அடி.

காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 13,008 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறத ு.

கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 5,214 கன அடி, வென்னாற்றில் 1,818 கன அட ி, கல்லணை கால்வாயில் 2,306 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 907 கன அடி தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் அக்டோபர் 9 வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிவிப்பு..!

விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

Show comments