Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூ‌ரியா உ‌ற்ப‌த்‌தியை அ‌திக‌ரி‌க்க‌ப் பு‌திய ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
திங்கள், 11 ஆகஸ்ட் 2008 (13:45 IST)
யூரியா உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதனா‌ல ் உ ர உ‌ற்ப‌த்‌தி‌த ் துறை‌யி‌ல ் தனியார் முதலீடுக‌ள் பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறக்குமதி செய்வதற்கு செலவிடும் விலை, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நே‌ற்று ந ட‌ ந் த பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு இதற்கு ஒப்புதல் அளித்தது.

அபிஜித் சென்குப்தா குழு அளித்திருந்த பரிந்துரையின் அடிப்படையில் இப்புதிய முறைக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக மத்திய அறிவியல ், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

புதிய அறிவிப்பின்படி உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு டன்னுக்கு 250 டாலர் (ரூ. 10,000) முதல் 425 டாலர் (ரூ. 17,000) வரை லாப‌ம ் கிடைக்கும்.

நாட்ட ி‌ ல ் த‌ற்போதுள்ள உர ஆலைகள் மூலம் 2.1 கோடி டன் யூரியா உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் தேவை 2.8 கோடி டன்னாகும். கூடுதல் தேவை இறக்குமதி மூலம் பூ‌ர்த்தி செய்யப்படுகிறது. புதிய அறிவிப்பின் மூலம் 2012-ஆம் ஆண்டில் உள்நாட்டில் யூரியா உற்பத்தி 4 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்பின் மூலம் தற்போதைய உற்பத்தி அளவைக் காட்டிலும் கூடுதலாக உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், கூடுதல் உற்பத்திக்கு டன்னுக்கு 250 டாலர் முதல் 425 டாலர் வரை பெறலாம்.

இதனால் ஏற்கெனவே உள்ள ஆலைகள் விரிவாக்கம் செய்வதன் மூலம் கூடுதல் உற்பத்தி செய்து அதிக தொகை பெற முடியும். இதேபோல புதிய ஆலைகள் அமைப்பதற்கான விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு யூரியா மானியமாக ஒரு டன்னுக்கு ரூ. 4,830 தொகையை அரசு அளிக்கிறது. ஆனால் உள்நாட்டில் யூரியா உற்பத்திச் செலவு ஒரு டன் ரூ. 13,000 ஆகும். சர்வதேச சந்தையில் ஒரு டன் யூரியா விலை 700 டாலராகும் (ரூ. 28,000).
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

Show comments