Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக வர்த்தக அமைப்பு பேச்சுவார்த்தை இந்தியாவின் நிலை மாற்றம்!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (12:40 IST)
அமெரிக்கா விவசாயதுறை மானியத்தை குறைப்பதாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. இதே மாதிரி மற்ற வளர்ந்த நாடுகளும் செயல்பட்டால் உலக வர்த்தக அமைப்பில் உடன்படிக்கை ஏற்படுதில் உள்ள தடைகள் நீங்கும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கமல்நாத் ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறினார்.

அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் தங்களது நாட்டு விவசாயிகளுக்கு வழங்கிவரும் மானியத்தை குறைக்க வேண்டும். வளரும் நாடுகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்க கூடாது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு தடையை ஏற்படுத்தும் விதத்தில் இறக்குமதி வரி, குவிப்பு வரி போன்றவைகளை விதிக்க கூடாது என்று இந்தியா அங்கம் வகிக்கும் ஜி-20, -ஜி-33 குழு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

வளரும் நாடுகளின் பிரதிநிதி போல் இந்தியா வளர்ந்த நாடுகள் மானியத்தை குறைக்க வேண்டும் என்று கறாராக வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் கமல்நாத் நேற்று விவசாய மானியத்தை குறைப்பதாக அமெரிக்கா கூறியிருப்பது நல்ல அடையாளம், இது போல் மற்ற வளர்ந்த நாடுகளும் செயல்பட வேண்டும் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

நேற்றுவரை, அமெரிக்க செய்துள்ள மானியக் குறைப்பு போதாது என்று கூறிவந்த இந்தியாவின் நிலைப்பாடு இன்று திடீரென்று மாறியுள்ளது.

இது உலக வர்த்தக அமைப்பில் இதற்கு முன் நடந்த பேச்சு வார்த்தையில் உறுதியாக இருந்த இந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள தலை கீழ் மாற்றமாக கருதப்படுகிறது.

அவர் மேலும் கூறுகையில், அமெரிக்கா 15 பில்லியன் டாலர் அளவுக்கு மானியத்தை குறைத்திருப்பதாக கூறியுள்ளதை கேள்விப்பட்டவுடன், எனக்கு உடன்பாடு ஏற்பட்டுவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இது பேச்சுவார்த்தையில் முன்னேற்றத்திற்கான அறிகுறி. இது மாதிரி வேறு துறைகளில் மற்ற வளரும் நாடுகளும் முயற்சி மேற்கொள்வார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார்.

அமெரிக்கா நேற்று முன்தினம் 15 பில்லியன் டாலர் அளவிற்கு மானியத்தை குறைப்பதாக அறிவித்தது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தொழில் - வர்த்தக்த் துறை அமைச்சர் கமல் நாத், அமெரிக்கா 15 பில்லியன் டாலர் மதிப்பிற்கு மானியத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்கா அதன் விவசாய துறைக்கு அளித்து வரும் மானியத்தை குறைப்பதாக கூறினாலும், உலக சந்தையில் தற்போது உள்ள உணவு தானியங்களின் விலையுடன் ஒப்பிடுகையில், அமெரிக்கா அறிவித்துள்ள மானியம் மிக சொற்பமே. அது உண்மையாகவே (இதையும் விட அதிகமாக) விவசாயதுறை மானியத்தை குறைக்க முன்வரவேண்டும். வளர்ந்த நாடுகள் உண்மையிலேயே விட்டுக் கொடுக்க வேண்டும். வளரும் நாடுகளிடம் இருந்து இலாபம் கிடைக்குமா என்று எதிர்பார்க்க கூடாது என்று கமல்நாத் கூறியிருந்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இனி வாய்ப்பே இல்லை: மூடப்பட்டது ஓய்வூதிய இயக்குநரகம்..!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்களிடம் விஜய் ஆலோசனையா? என்ன காரணம்?

இன்று மாலை 4 மணி வரை 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!

அதிமுகவுடன் கூட்டணிக்கு அவசியம் இல்லை! அழைப்பை மறுத்த திருமாவளவன்!

போன வாரம் கார் விபத்து.. இப்போ கத்திக்குத்து! மீண்டும் சாலையில் பிணங்கள்! - அடுத்தடுத்து சீனாவில் அதிர்ச்சி!

Show comments