Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மார்க்கெட்டுகளால் விவசாயிகளுக்கு இலாபம்!

Webdunia
சனி, 19 ஜூலை 2008 (16:49 IST)
சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் காய்கறி, பழம், உணவு தானியம் போன்றவைகளை விற்பனை செய்யும் போது 50 விழுக்காடு வரை இலாபம் அடைகின்றனர்.

அத்துடன் மளிகை கட ை, காய்கறி கடை போன்ற சில்லரை விற்பனை நிலையங்களை விட, சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்கும் பொது மக்களுக்கும் குறைந்த விலையில் கிடைக்கின்றது என்று ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருப்பது போல், இந்தியாவிலும் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் துவக்கப்படுகின்றன. இந்த சில்லரை விற்பனை நிலையங்களை அதிக மூதலீடு செய்யும் சக்தியுள்ள தொழில் வர்த்தக நிறுவனங்கள் துவக்கிவருகின்றன. முக்கியமாக சென்னை, மும்பாய், டெல்லி, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட்டுகள் துவக்கியுள்ளன.

இவைகளில் எந்த ஒரு பொருளும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கிடைக்கும். இந்த மாதிரியான சில்லரை விற்பனை கடைகள் சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இந்த சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் குறித்து “ இன்டர்நேஷனல் புட் பாலிசி ரிசர்ச் இன்ஷ்டியூட ் ” என்ற அமைப்பு ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் இருந்து விவசாயிகள் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும் போது 20 முதல் 50 விழுக்காடு வரை இலாபம் அடைகின்றனர்.

தற்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் மத்திய வருவாய் பிரிவினர் பொருட்களை வாங்கி பயன் பெறுகின்றனர். நகர்ப்புறங்களிலும், மற்ற சிறிய நகரங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கப்படும் போது, அங்குள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கும் பயன் கிடைக்கும்.

உதாரணமாக டெல்லியில் மற்ற சில்லரை விற்பனை கடைகளுடன் ஒப்பிடுகையில், சூப்பர் மார்க்கெட்டுகளில் உணவு பொருட்களின் விலை குறைவாக இருக்கிறது. இங்கு அரிசி, கோதுமை விலை 15 விழுக்காடும், காய்கறி விலை 33 விழுக்காடு வரையிலும் குறைவாக இருக்கின்றது.

பல நாடுகளில் சூப்பர் மார்க்கெட்டுகளில் பதப்படுத்தப்பட்ட, பாதியளவு பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன.

மற்ற வியாபாரிகளுடன் ஒப்பிடுகையில், சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்டுகள் தரமான பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், தேவையான அளவு பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து கிடைக்கும் வகையில் விவசாயிகளுடன் உடன்பாடு செய்து கொள்கின்றன.

இவை விவசாயிகளுக்கு ஆரம்ப கட்ட முதலீட்டை கொடுக்கின்றன. இதனால் விவசாயிகள் பலன் அடைகின்றனர்.

இந்த ஆய்வு சூப்பர் மார்க்கெட்டுகளால் ஒரு புறம் நன்மை ஏற்படுவதுடன் மறு புறம் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு தகுந்த மாதிரி வளரும் நாடுகளின் அரசுகள் சூப்பர் மார்க்கெட்டுகளால் விவசாயிகள், சில்லரை வியாபாரிகள் எதிர் கொள்ளும் பிரச்சனையை மனதில் கொள்ள வேண்டும். அதற்கு தகுந்த மாதிரி தேவையான கொள்கைகளை வகுக்க வேண்டும்.

இது உற்பத்தி பொருட்களை கொண்டு சேர்க்கும் வசதிகளையும், நிலம் மட்டுமல்லாமல், மற்ற வகை வசதிகளும் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதம். அதே நேரத்தில் நிலம் மட்டுமே உள்ள விவசாயிகளுக்கும், சில்லரை வியாபாரிகளுக்கும் சோதனைதான்.

வங்கி கடன் போன்ற நிதி உதவி பெறவும், விவசாயத்திற்கு தேவையான மற்ற வகை உதவி, பயிற்சி, தகவல்கள் பெறுதல் போன்றவைகளுக்காக அரசு, முதலீடு செய்ய வேண்டும். இது மாதிரியான முயற்சிகளை ஏற்கனவே சில நாடுகள் எடுத்துள்ளன. இந்த அனுபத்தின் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தனியார் துறையால் மட்டும் சாத்தியமில்லை என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments