Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரீப் பருவத்தில் பயிரிடும் பரப்பு அதிகரிப்பு!

Webdunia
சனி, 5 ஜூலை 2008 (12:55 IST)
கரீப் பருவத்தில் அதிக அளவு நிலப்பரப்பில் பல்வேறு உணவு தானியங்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் பணவீக்கம் அதிகரித்து மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியையே பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக தென்மேற்கு பருவமழை தேவையான அளவு பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் நெல், கோதுமை போன்ற உணவு தானியங்களையும், பருப்பு வகைகள், சோயா போன்ற எண்ணெய் வித்துக்களையும் பயிரிட்டுள்ளதாக வந்துள்ள தகவல் மத்திய அரசு உட்பட பல்வேறு தரப்பினருக்கும் ஆறுதல் அளித்துள்ளது.

இந்த கரீப் பருவத்தில் நெல், மக்காச் சோளம், உளுந்து, எண்ணெய் வித்துக்களான நிலக்கடலை, சோயா ஆகியவை அதிக அளவு பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன.

இதே போல் சிறுதானியங்களும் சென்ற கரிப் பருவத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பருவத்தில் பருத்தி, கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு குறைந்துள்ளது.

பருத்தி அதிக அளவு பயிரிடப்படும் பஞ்சாப் மாநிலத்தில் 5.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 6.04 லட்சம் ஹெக்டேர்).

இதே போல் ஹரியானா 4.18 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 4.83 லட்சம் ஹெக்டேர்), ராஜஸ்தானில் 1.36 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 3.50 லட்சம் ஹெக்டேர்), ஆந்திரா 1.82 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 3.51 லட்சம் ஹெக்டேர்) பயிரிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் மட்டும் பருத்தி பயிரிடப்படும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் 2.35 லட்சம் ஹெக்டேரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 0.56 லட்சம் ஹெக்டேர்).

பஜ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் இந்த வருடம் மற்ற பயிர்களுக்கு பதிலாக ஆர்வத்துடன் அதிக அளவு நெல் பயிரிட்டுள்ளனர்.

அதே போல் ராஜஸ்தான் மாநிலத்தில் சோளம், மக்காச் சோளம், நிலக்கடலை, சோயா அதிக அளவு பயிரிட்டுள்ளனர்.

விவசாயிகள் பருத்திக்கு பதிலாக மற்ற வகை பயிர்களில் கவனம் செலுத்தியதற்கு காரணம் பருவமழை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே ஆரம்பித்தது. பருத்தியில் பூச்சி தாக்குதலால் ஏற்படும் நஷ்டமே.

நெல், பருப்பு வகைகளுக்கு அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் அதிக அளவு இதை பயிரிட்டுள்ளனர்.

இந்த வருடம் கரும்புக்கு, சர்க்கரை ஆலைகள் உரிய விலை, வெட்டுவதற்கான உத்தரவு கொடுக்காதது போன்ற பிரச்சனைகளால் கரும்பு பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை. இதனால் கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் 18.6 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 21.33), மகாராஷ்டிரா 7 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 10.88), தமிழ்நாடு 3.58 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 3.86), கர்நாடகா 1.97 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 2.19), குஜராத் 2.08 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 2.16), ஆந்திரா 1.45 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 2.47), ஹரியானா 1.25 லட்சம் ஹெக்டேர் (சென்ற வருடம் 1.5)

மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி ஜூன் மாதம் இறுதி வரை நெல் 55.95 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 47.08).

சோளம் 29.97 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 11.64).

மக்காச் சோளம் 26.47 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 21.57).

சோளம் 7.61 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 9.84).

மற்ற சிறு தானிய வகைகள் 66.68 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 47.04).

நிலக்கடலை 20.67 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது. (சென்ற வருடம் 19.34).

சோயா 24.82 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 22.07).

சூரியகாந்தி 1.14 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 3.22).

எள் 3.11 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 3.37).

ஆமணக்கு 0.23 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 1.39)

நிலக்கடலை, சோயா, எண்ணெய் கடுகு உட்பட எல்லா வகை எண்ணெய் வித்துக்களையும் சேர்த்து 50.01 ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 49.52).

பருத்தி 18.23 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 20.13).

கரும்பு 42.82 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 51.74).

சணல் 8.66 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 7.03).

துவரை 4.45 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 43.86).

உளுந்து 3.96 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 2.68).

பயத்தம் 6.77 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 5.29).

மற்றவை பருப்பு வகைகளுக்கு தேவையான தானியங்கள் 4.83 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ளது (சென்ற வருடம் 1.65)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூர் முதல்வர் மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே தாக்குதல்: அதிகாலை ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

இன்றும் ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியது: முன்பதிவு செய்ய முடியாமல் பயணிகள் தவிப்பு..!

வெளிநாட்டில் இருந்து சிசிடிவியை கவனித்த நபர்.. வீட்டில் நடந்த திருட்டை தடுத்த சம்பவம்..!

உங்கள் மனைவி ஓடிப்போக வேண்டும் என்று இருந்தால்.. நாராயணமூர்த்திக்கு அதானி பதிலடி..!

சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு: முதல்வர் பினராயி விஜயனுக்கு பாஜக கண்டனம்..!

Show comments