Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராக்டர் வாங்க மகேந்திரா கடன்!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (12:34 IST)
டிராக்டர் வாங்க விவசாயிகளுக்கு மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவனம் கடன் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் கொடுப்பதை கடந்த மாதம் பாரத ஸ்டேட் வங்கி நிறுத்தியுள்ளதாக அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கடன் கொடுப்பது தொடரும் என்று ஸ்டேட் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் இந்தியாவின் முன்னணி டிராக்டர் தயாரிப்பு நிறுவனமான மகேந்திரா அண்ட் மகேந்திரா, டிராக்டர் வாங்குவதற்கு விவசாயிகளுக்கு கடன் வழங்க மகேந்திரா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன்படி “கடன் வழங்கும் திருவிழ ா ”வை நடத்தி, டிராக்டர் வாங்கும் விவசாயிகளுக்கு உடனே கடன் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த கடன் திருவிழா தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முக்கிய நகரங்களில் நடத்தப்படும். அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை கடன் வழங்கப்படும்.

இது குறித்து இந்நிறுவனத்தின் விவசாய கருவிகள் பிரிவு தலைவர் அஜ்சனி குமார் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு எளிமையான வட்டி விகிதத்தில் உடனே டிராக்டர் வழங்கும் திட்டம் அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.

மகேந்திரா நிறுவனம் கிராமப்புறங்களில் வளம் பெருக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதன் ஒரு பகுதிதான் கடன் திருவிழா மூலமாக உடனுக்குடனே விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க கடன் வழங்கப்படுகிறது. இந்த புதிய முயற்சியால் வாடிக்கையாளர்களிடம் எளிதாக சென்றடைவதுடன், கடந்த 25 வருடங்களாக டிராக்டர் விற்பனையில் முதலிடத்தில் இருப்பது மேலும் உறுதிப்படுத்தப்படும். கடன் ஆவணங்களை விரைவில் பரிசீலனை செய்வது, ஒரே இடத்தில் கடன் அனுமதி போன்றவை களால் குறைந்த காலத்தில் விவசாயிகள் டிராக்டர் வாங்க முடியும் என்று கூறியுள்ளார்.

மகேந்திரா நிதி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரமேஷ் அய்யர் கூறுகையில், மகேந்திரா நிதி நிறுவனத்திற்கு பரந்த அளவில் கிளைகள் இருப்பதால், இந்த திட்டத்தின் மூலம் தொலை தூரத்தில் உள்ள விவசாயிகளும் கடன் பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments