Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயத்தில் இயந்திரம் பயன்படுத்தினால் தான் லாபகரமாக இருக்கும்: வீரபாண்டி ஆறுமுகம்!

Webdunia
புதன், 11 ஜூன் 2008 (12:05 IST)
விவசாயத்தில் இயந்திரம் பயன்படுத்தினால் தான் லாபகரமாக இருக்கும் என்ற ு வேளாண்ம ை‌த்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூ‌றினா‌ர்.

புதுக்கோட்டையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் வளர்ச்சி பணிமனை மற்றும் கண்காட்சி தொடக்க விழ ா‌வி‌ல் கல‌ந்து கொ‌ண்டு அமை‌ச்ச‌ர் ‌‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் பேசுகை‌யி‌ல், கடந்த 1996ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து சில விவசாய நிபுணர்களை தமிழகத்திற்கு வரைவழைத்து இங்கு ஆய்வு செய்து சில மாற்றங்களை கொண்டு வந்தார். அதன்படி தற்போது ராமநாதபுரம், விருதுநகர், தர்மபுரி ஆகிய வறட்சி பகுதிகளில் எஸ்.ஆர்.ஐ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இது ஒரு ஏக்கருக்கு விதைப்பதற்கு 25 கிலோ தேவைப் பட்டதை மாற்றி 2 கிலோ மட்டுமே போதுமானதாக கொண்டு இதன் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 13 டன் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதனை தற்போது அழகான தமிழில் செம்மை நெல்சாகுபடி முறை என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிர் செய்ய திட்டமிடப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் அதனை எந்த அளவில் செயல்படுத்துவது என்று கணக்கிடப்பட்டு புதுக் கோட்டை மாவட்டத்தில் 26 ஆயிரத்து 800 ஹெக்டேரும், திருச்சி மாவட்டத்தில் 26 ஆயிரத்து 700, தஞ்சாவூரில் 83 ஆயிரத்து 700, நாகப்பட்டினத்தில் 73 ஆயிரத்து 600, திருவாரூரில் 72 ஆயிரத்து 400, பெரம்பலூரில் 16 ஆயிரத்து 900 ஹெக்டேரிலும் இந்த முறை பயன்படுத்தப்பட உள்ளது.

விவசாயத்திற்கு ஆள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இயந்திர மாக்குவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது. நெல் நாற்று நடும் இயந்திரம், அறுவடை இயந்திரம் ஆகியவற்றை வாங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் 6 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேளாண்துறைக்கு பிரித்து தரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாயத்தில் இயந்திரத்தை பயன்படுத்தினால் தான் லாபகரமாக இருக்குமே தவிர தொழிலாளர்களை கொண்டு விவசாயத்தை செய்தால் லாபகரமாக இருக்காது. 2008-09-ம் ஆண்டிற்கு 108 லட்சம் மெட்ரிக் டன்னாக உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எ‌‌ன்று அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments