Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ட்டூ‌ர் அணை ஜூன் 12ஆ‌ம் தேதி ‌திறப்பு: முத‌ல்வ‌ர் உத்தரவு!

Webdunia
வியாழன், 29 மே 2008 (10:51 IST)
காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆ‌ம ் தேதி மேட்டூர் அணையை திறக்க முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில ், மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100 அடிக்கு மேல் நீர் இருப்பு இப்போதே இருப்பதால் ஜூன் மாதம் 12ஆ‌ம ் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

இது குறித்து விவசாயத்திற்கு தேவையான விவசாய கடன், விதை, உரம் போன்றவைகளை உரிய நேரத்தில் அவர்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளிடமிருந்து பல்வேறு முறையீடுகள் வந்த பிறகே மேட்டூர் அணை திறக்கப்படும் என்பதற்கு மாறாக இந்த ஆண்டு வேண்டுகோள் வருவதற்கு முன்பே மேட்டூர் அணை திறக்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றேன் எ‌ன்ற ு முத‌‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments