Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரும்பு கொள்முதல் விலை நிர்ணயிக்க குழு!

Webdunia
வியாழன், 29 மே 2008 (10:50 IST)
கரும்பு கொள்முதல் விலையை அதன் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை த‌மிழக அரசு அமைத்துள்ளது.

இது கு‌றி‌த்து தமிழக வேளாண்மைத் துறை ஆணையாளர் கோசலராமன் வெளியிட்ட அறிக்க ை‌யி‌ல், கரும்பு கொள்முதல் விலையை அதன் தரத்திற்கு ஏற்ப நிர்ணயம் செய்ய உயர்மட்ட நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.

இந்த குழுவில் வேளாண்மை துறை செயலாளர் தலைவராகவும், விவசாயிகள், வேளாண்மை விஞ்ஞானிகள் மற்றும் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.

கரும்பின் தரக் காரணிகளான ஒட்டுமொத்த திடப்பொருள்கள், சர்க்கரைச் சத்து போன்றவற்றை கரும்பு சாறிலிருந்து கணக்கிட்டு, கரும்பின் விலையை நிர்ணயம் செய்ய ஒரு சூத்திரத்தை வகுத்து, அரசுக்கு குழு பரிந்துரை செய்யும்.

இந்த புதிய முறையால் தரமான கரும்பு வழங்கும் விவசாயிகளுக்கு உடனடியாக நியாயமான விலை கிடைக்கும் எ‌ன்று கோசலராம‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments