Webdunia - Bharat's app for daily news and videos

Install App

154 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமை கொ‌ள்முத‌ல்!

Webdunia
வெள்ளி, 2 மே 2008 (20:55 IST)
நாடு முழுவது‌ம் உழவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்து அரசு முகவா‌ண்மைக‌ள் மூல‌ம் 154.2 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமை கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இது இ‌ந்த ஆ‌ண்டு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்ப‌ட்ட இல‌க்கான 150 ல‌ட்ச‌ம் ட‌ன் எ‌ன்பதை‌விட அ‌திக‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

அறுவடை கால‌ம் முடியாத ‌நிலை‌யி‌ல் கூடுதலாக இ‌ன்னு‌ம் 30 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமையை இரு‌ப்‌பி‌ற்காக‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று அரசு ந‌ம்‌பி‌க்கை தெ‌‌ரி‌வி‌த்து‌‌ள்ளது.

" இ‌ந்த அறுவடை‌க் கால‌த்‌தி‌ல் (ஏ‌ப்ர‌ல் 1 முத‌ல் ஜூ‌ன் 15 வரை) 180 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமையை‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய முடியு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம்" எ‌ன்று இ‌ந்‌திய உணவு‌க் கழக‌த்‌தி‌ன் தலைவரு‌ம் ‌நி‌ர்வாக இய‌க்குநருமான அலோ‌க் ‌சி‌ன்ஹா செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

நமது நா‌ட்டி‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய உணவு தா‌னிய‌‌க் கொ‌ள்முத‌‌ல் ‌நிறுவனமான இ‌ந்‌திய உணவு‌க் கழக‌ம், ஏ‌ப்ர‌ல் 1 ஆ‌ம் தே‌தி 55.49 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமையை‌க் கொ‌ள்முத‌ல் செ‌ய்‌திரு‌ந்தது. இது வழ‌க்கமான 40 ல‌ட்ச‌ம் ட‌ன் எ‌ன்பதை ‌விட அ‌திக‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

2007- 2008 இ‌ல் அரசு முகவா‌ண்மைக‌ளி‌ல் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ஒ‌ட்டுமொ‌த்த கோதுமை‌யி‌ன் அளவு 111.2 ல‌ட்ச‌ம் ட‌ன்களாகு‌ம்.

கட‌ந்த இர‌‌ண்டு ஆ‌ண்டுகளாக போதுமான அளவு நெ‌ல் கொ‌ள்முத‌ல் இ‌ல்லாததா‌ல் அவசரகால இரு‌ப்பு‌த் தேவை‌க்காக அய‌ல்நாடுக‌ளி‌ல் இரு‌ந்து கோதுமை கொ‌ள்முத‌ல் செ‌ய்யு‌ம் ‌நிலை‌க்கு அரசு த‌ள்ள‌ப்ப‌ட்டது.

2006 ஆ‌ம் ஆ‌ண்டி‌ல் மொ‌த்த‌ம் 92 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமை ம‌ட்டுமே கொ‌ள்முத‌ல் ஆனதா‌ல், 55 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமை இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டது. 2007 ஆ‌ம் ஆ‌ண்டி‌லு‌ம் ப‌ற்றா‌க்குறை ‌நீடி‌த்ததா‌ல் 18 ல‌ட்ச‌ம் ட‌ன் கோதுமை இற‌க்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழை வெள்ள பாதிப்பு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்.. முதல்வர் அறிவிப்பு..!

சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம்! தமிழக அரசு அறிவிப்பு..!

ஷிண்டே மகனுக்கு துணை முதல்வர் பதவி? ஷிண்டேவுக்கு உள்துறை.. மகாராஷ்டிரா நிலவரம்..!

மீண்டும் அதானி விவகாரம்.. மீண்டும் இரு அவைகளும் ஒத்திவைப்பு..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகனமழை பெய்யும்: ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்..!

Show comments