ஜூன் மாத‌த்‌தி‌ல் விவசாய கடன் தள்ளுபடி அமல்!

Webdunia
வியாழன், 10 ஏப்ரல் 2008 (16:52 IST)
மத்திய அரசு அறிவித்துள்ள விவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஜூன் மாதத்தில் இருந்து அமல்படுத்தப்படும் என்று நபார ்டு வங்கி தலைவரும் மேலாண்மை இயக்குநருமான யூ.சி. சாராங்கி தெரிவித்தார்.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் சென்ற பிப்ரவரி 29 ந் தேதி மக்களவையில் சமர ்‌ப ்பித்த பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும என்று அறிவித்தார்.

இது குறித்து நபார்டு என்று அழைக்கப்படும் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைவரும் நிர்வாக இயக்குநருமான யூ.சி. சாரங்கி கூறுகையில், இந்த வருடம் கடன் தள்ளுபடி செய்ய நிச்சயிக்கப்பட்ட ஜூன் மாதத்தில் கடன் தள்ளுபடி செய்யப்படும் இதற்கு தேவையான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

நபார்டு வங்கி, கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. கடந்த வருடம் புதிதாக 30 லட்சம் விவசாயிகள் கடன் அட்ட ை ( கிசான் கிரடிட் கார்ட ்) வழங்கப்பட்டுள்ளன. இது வரை மொத்தம் ஏழு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இ‌‌தி‌ல் பாதிக்கும் அதி கம ானவைகள் கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளன.

2007-08 நிதி ஆண்டில் நபார்டு வங்கியின் விற்று முதல் ரூ.98,500 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வருடத்தைவிட 21 விழுக்காடு அதிகம் என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏலியன்கள் இருப்பது உண்மை!.. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா பேட்டி!..

பாஜக எம்.எல்.ஏவுக்கு ஜாமின் மறுத்த உச்சநீதிமன்றம்.. கைது செய்ய விமான நிலையத்தில் காத்திருக்கும் காவல்துறை..!

விஜயகாந்தை விட விஜய் திமுகவை அதிகம் காலி பண்ணுவார்!.. டிடிவி தினகரன் ஓப்பன்...

கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்த ஜியோ.. என்ன காரணம்?

ரகசியமாக சிறையில் இருந்து வெளியே வந்தாரா இம்ரான்கான்? வெளிநாடு செல்ல திட்டமா?

Show comments