Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பருவநிலை மாற்ற‌த்தா‌ல் நெ‌ல் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம்!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (20:27 IST)
உலகில் பாதியளவு மக்கள் அ‌ரி‌சியை‌த் தங்களது உணவாக பயன்படுத்த ு‌ம் ‌நிலை‌யி‌‌ல், பருவநிலை மாற்றத்தால் நெ‌ல் உற்பத்தி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

உலக மக்கள் தொகை வளர்ச்சியின் அடிப்படையில் ஏற்கனவ ே, அரிசிக்கான தேவை மூன்று மடங்கு அ‌திக‌ரி‌த்து‌ள்ள நிலையில ், ஆஃப்ரிக்கா போன்ற ஏழ்மையான பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும்.

பருவநிலை மாற்றங்களால் உற்பத்தி பாதிப்பை தீர்மானிப்பது மிகவும் கடினமானது. பயிர்களின் வளர்ச்சியில் சீதோஷ்ண நில ை, கார்பன் டை ஆக்ஸைட ு, ஓசோன் அளவு குறைந்து வருதல் ஆகியவை மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று அநத ஆய்வு கூறுகிறது.

இதுபோன்ற ஆய்வுகள் ஒரு முக்கிய பிரச்சனைகளை மட்டுமே மையப்படுத்தினாலும ், எடுத்துக்கொள்ளப்பட்ட காரணியின் ஒட்டுமொத்த விளைவுகளை அறிவதும் கடினமானது.

ஆய்வை மேற்கொண்ட இல்லினோய்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் எலிசபெத் அய்ன்ஸ்வொர்த் கூறுகையில ், " செயற்கையான பருவமாற்றங்களைக் கொண்டு உண்மையான உலகில் ஏற்படும் மாற்றங்களையும ், அதற்கான தீர்வுகளையும் கூறுவது சரியானதாகாது. ஆனால ், 80 வேறுபட்ட ஆய்வுகளை ஒன்றிணைப்பதின் மூலம் அவை ஓரளவு சாத்தியம ்" என்றார்.

சீதோஷ்ண நிலை பாதிப்புகள ்!

தினமும் சராசரியாக 30 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக சீதோஷ்ண நிலை காணப்படும் போத ு, அரிசியின் உற்பத்தி வீழ்ச்சி அடையும்.

குறைவான உற்பத்தி நிகழும் போது சீதோஷ்ண நிலை அதிகரிக்கிறது. இது கார்பன் டை ஆக்ஸைடின் அளவை அதிகரித்து பருவநிலை மாற்றத்திற்கு வித்திடுகிறது.

எரிசக்தி நிலையங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் ஆக்ஸைடால் சூர்ய வெளிச்சத்திலும ், மிதமான சூழலும் ஓசோன் படர்கிறது. இதனால் சீன ா, அமெரிக்காவில் 14 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

செயற்கையான தட்பவெப்ப நிலையில் ஓசோனின் பாதிப்பு ஆய்வு செய்யப்பட்டதில் அது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான க ள ஆய்வுகளில் நிர்ணயிக்கப்பட்ட ஓசோன் அளவு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால ், உண்மையான அளவுகள் தினமும் மாறக்கூடியது. அதனால் தாவரங்கள் குறைந்தது முதல் அதிகமான அளவுகளில் மாற்றங்களை கண்டுள்ளத ு.

புதிய ரகங்கள் தேவை!

இதுகுறித்து அய்ன்ஸ்வொர்த் கூறுகையில ், " உயர்ந்த ஓசோன் அளவையும ், அதிகமான தட்பவெப் ப நிலையையும் சமாளிக்கும் வகையிலான புதிய ரக அரிசிகளை உற்பத்தி செய்ய வேண்டியது இதற்கு தீர்வாக அமையும். ஆஃப்ரிக்க ா, உணவு தட்டுப்பாடு உள்ள பகுதிகள் போன்ற பெரும்பாலும் வெப்பம் அதிகமாக உள்ள பகுதிகளில ் இவற்றை பயிரிடலாம்.

இது உலகம் முழுவதிலும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தாது. உணவுக்கு தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் தரமற்ற பொருட்களே கிடைக்கிறத ு" என்றார்.

இந்த ஆய்வு குறித்து வேளாண்மை நிபுணர்கள் கூறுகையில ், " பருவநிலை மாற்றம் உணவுப்பொருட்கள் உற்பத்தியில் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை புரிந்துகொள்ள இன்னும் காலம் உள்ளது. ஆனால ், பருவநிலை மாற்றத்தை இப்போதே ஒழுங்குபடுத்த முயல்வது அவசியம். ஓசோன் அளவ ு, கார்பன் டை ஆக்ஸைடு ஆகியவற்றின் உயர்வால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதுவரை தனித்தனியாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளத ு" என்றனர்.

ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியார் டேனியல் தாப் கூறுகையில ், " இந்த உலகில் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிவது கொஞ்சம் கடினமானதுதான ். ஆனால ், இந்த ஆய்வில் முன்பு மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளும் இடம்பெற்றுள்ளது" என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் அந்த சார்? பதில் சொல்... சட்டசபை அருகே அதிமுக எம்.எல்.ஏக்கள் கோஷம்..!

வெளியேறியது ஏன்? நீக்கப்பட்ட விளக்கம் மீண்டும் வெளியீடு.. ராஜ்பவன் பதிவு வைரல்..

பேரவை நிகழ்வுகள் நேரலையை துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு! அதிமுக கண்டனம்..!

இந்தியாவில் முதல் HMPV வைரஸ் உறுதி! 8 மாத குழந்தைக்கு பாதிப்பு! - அதிர்ச்சியில் மக்கள்!

ஆளுநர் வெளியேறியதால் உரையை வாசித்தார் சபாநாயகர் அப்பாவு.. அரசின் சாதனைகள்

Show comments