Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப்பில் நெல் பயிரிட‌த் தடை!

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (18:05 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் நெல் நாத்து வி ட, நெல் விதைக்க தடை செய்யப்பட்டுள்ளத ு.

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான அமிர்தசரஸ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைவதாக கூறி நெல் நாத்து விடவும ், நெல் விதைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளத ு.

அமிர்தசரஸ் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ககான் சிங் பன்ன ு, 144 சட்ட பிரிவு படி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேற்று தடை விதித்துள்ளார ்.

இதன்படி மே 10ஆம் தேதிக்கு முன்பா க, நெல் நாத்து விடக்கூடாத ு. அதே போல் ஜூன் 10ஆம் தேதி முன்பாக வயலில் நாத்து நடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளத ு.

இந்த தடை உத்தரவில ், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்ட ு, தன் முனைப்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறத ு. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளத ு.

இந்த உத்தரவில் மாஜிஸ்ட்ரேட் ககான் சிங் பன்ன ு, அமிர்சரஸ் மாவட்டத்தில் கரிப் பருவத்தில் நெல் முக்கியமான பயிராகும ். இந்த மாநிலத்தில் உள்ள 2.22 லட்சம் ஹெக்டேரில் நெல் மட்டும் 1 லட்சத்து 78 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறத ு. இதற்கு ஆரம்பம் முதலே தண்ணீர் அதிக அளவு வேண்டும ். இதற்கான தண்ணீர் பாசனத்திற்கு ஆழ்துளை குழாய்களில் இருந்து நீர் இறைக்கப்படுகிறத ு.

இதனால் கடந்த ஐந்து வருடங்களா க, இந்த மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 48 ச ெ. மீ நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறத ு. இதற்கு முக்கிய காரணம் ம ே, ஜூன் மாதங்களில் நெல் பயிரிடப்படுவதே என்று கூறப்பட்டுள்ளத ு.

பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம ், பஞ்சாப் விவசாயிகள் ஆணையம ், பஞ்சாப் மாநில முன்னணி விவசாய விஞ்ஞானிகள் ஆகியோர் மே மாதத்தில் நெல் பயிரிடுட கூடாது என பல முறை வலியுறுத்தி கூறியுள்ளனர ். ஆனால் நெல் பயிரிடுவதை தடுக்க முடியவில்ல ை. பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்பாக நெல் விதைப்பு நடைபெறாமல் இருந்தால ், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து இருந்தத ு.

இவற்றை கருத்தில் கொண்டு இதற்கு முன் இல்லாத வகையில ், இப்போது முதன் முதலாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு.

மாநில அரசு ஜூன் 15 ந் தேதிக்கு முன்பு நெல் பயிரிடுவதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற ு, பல விவசாய துறை நிபுணர்கள் மாநில அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர ்.

பஞ்சாப ், ஹரியான மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் குறுகிய கால பயிரான சாதி ரக நெல்லை பயிர் செய்கின்றனர ். இது 75 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments