Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர்

Webdunia
சனி, 22 மார்ச் 2008 (14:09 IST)
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டதாகும். இங்க ு‌ ளள மக்களில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் விவசாயத்தை சார்ந்த தொழில்களை நம்பியே உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேல் மழை இல்லாத காரணத்தால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கியது.

இதனால் விவசாயிகள் வாழ்க்கை பின்னோக்கி செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதேபோல் சத்தியமங்கலம், அந்தியூர் பகுதியில் உள்ள வனப்பகுதிகளிலும் காய்ந்துபோக தொடங்கியது.

வனப்பகுதிக்குள் இருக்கும் குளம் மற்றும் குட்டைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்குகள் தண்ணீரை தேடி கிரமாங்களுக்கு படையெடுக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரத்திலும் இரவு நேரங்களிலும் மழை பெய்ய தொடங்கிவிட்டது.

ற்று இரவு விடிய, விடிய மழை பெய்துகொண்டே இருந்தது. ஈரோடு மாவட்டம் பவானியில் 1.40 மி.மீ. மழையும் தாராபுரம்11.00 ம.மீ., கோபி10.00 மி.மீ., காங்கயம்8.20 மி.மீ., பெருந்துறை 1.00 மி.மீ., சத்தியமங்கலம்4.00 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

பேஸ்புக் காதலியை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற இந்தியர்.. நடந்த விபரீதம்..!

எருமை மாடாடா நீ? பேப்பர் எங்கே? உதவியாளரை ஒருமையில் திட்டிய அமைச்சர்..!

டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? தயார் நிலையில் தேர்தல் ஆணையம்..!

Show comments