Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 18 மார்ச் 2008 (12:16 IST)
இந்தியாவில் இருந்து அந்நிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சோயா புண்ணாக்கு குறைந்துள்ளது.

இந்த நிதி ஆண்டில் பிப்ரவரி மாத இறுதிவரை 33.8 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற நிதி ஆண்டின் 11 மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.85 விழுக்காடு குறைவு.

சோயா புண்ணாக்கு ஏற்றுமதி நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்திருந்தாலும், இந்த எண்ணெய் வருடத்துடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து சோயா எண்ணெய் ஆலைகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் அகர்வால் கூறும் போது,
இந்த எண்ணெய் ஆண்டில் சோயா எண்ணெய் ஆலைகளின் வர்த்தகம் குறிப்பிடத்தக்க அளவு முன்னேறியுள்ளது.
2007 அக்டோபர் முதல் 2008 பிப்ரவரி வரை சோயா புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.

இந்த ஐந்து மாதங்களில் 26.18 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது சென்ற எண்ணெய் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ( ஐந்து மாதம ்) 19.20 விழுக்காடு அதிகம். சென்ற வருடம் 21.96 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்பட்டது என்று கூறினார்.

சோயா புண்ணாக்கு மாட்டு தீவனம், கோழி தீவனம் போன்றவைகள் தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால், இதன் விலை உள்நாட்டில் அதிகரிக்கிறது. இந்த ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்று கால்நடை, கோழிப் பண்ணை உரிமையாளர்கள் கூறிவருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வரப்போகும் புதிய உயர்மட்ட சாலை! - தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம்!

Show comments