Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உறைபனி : விவசாயிகளுக்கு நஷ்டஈடு!

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2008 (17:05 IST)
ராஜஸ்தான் மாநில அரசு உறைபனியாலும ், பனிக்காற்றாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ர ூ.126 கோடி நஷ்டஈடு வழங்கப் போகிறத ு.

இந்த வருடம் ராஜஸ்தான ், பஞ்சாப ், ஹரியா ன, மத்திய பிரதேசம் உட்பட பல வட மாநிலங்களில் கடுமையான உறை பனியும ், குளிர் காற்றும் வீசியத ு. இதனால் விளைந்த பயிர்கள் உறை பனியால் கருத்து போயி ன. அத்துடன் குளிர் காற்றால் பல்வேறு பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டமடைந்தனர ்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு ர ூ.126 கோடி ஒதுக்கியுள்ளத ு.

இதற்கான முடிவு நேற்று முதல்வர் வசந்தரா ராஜூ தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டத ு. இதை பேரிடர் நிவாரணத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் தேவ ், சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் ரத்தோரி ஆகியோர் தெரிவித்தனர ்.

இது குறித்து சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் ரத்தோரி செய்தியாளர்களிடம் கூறும் போத ு, மாவட்டங்களில் இருந்து பாதிக்கப்பட்ட விபரம் கிடைத்தவுடன ், மார்ச் முதல் வாரத்தில் இருந்து நஷ்டஈடு விநியோகிக்கப்படும ். இதில் ர ூ.101 கோட ி, பாதிக்கப்பட்ட 1,37,287 விவசாயிகளுக்கு வழங்கப்படும ். சிறு மற்றும் குறு விவசாயிகளின் நான்கு மாத மின் கட்டணத்தை ரத்து செய்வதற்கு ர ூ.15 கோடியும ், தண்ணீர் வரி தள்ளுபடி செய்ய ர ூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளத ு.

விவசாயிகள் பயிரிட்ட பரப்பளவில் 50 விழுக்காடுக்கும் அதிகமாக பாதிப்பு இருந்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட ு, நில வரி ரத்து செய்யப்படும ். அத்துடன் குறுகிய கால கடன்கள் நீண்ட கால கடன்களாக மாற்றப்படு்ம ்.

பேரிடர் நிவாரணத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் தேவ் கூறும் போத ு, மாநிலத்தின் 22 மாவட்டங்களில் பனிக்காற்றால் 8 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் சராசரியாக 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார ்.

அதே நேரத்தில் முன்னாள் முதலமைச்சர் அசோக் கிலாட் கூறும் போத ு, இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி எழுப்பிய பிறகு தான் அரசு நிவாரணம் அறிவித்துள்ளத ு. இந்த நிவாரண நிதி போதுமானதல்ல என்று தெரிவித்தார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவர்னர் ரவியை விஜய் சந்தித்தது ஏன்? அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..!

நாகர்கோவில் காசிக்கு 3 ஆண்டுகள் சிறை! தந்தைக்கு 2 ஆண்டுகள் சிறை..!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 4 அறைகள் தரைமட்டம்: 6 பேர் பரிதாப பலி..!

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

Show comments