Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2008-இ‌ல் உணவு தா‌னிய உற்பத்தி 21 கோடி ட‌‌ன்: வேளாண் அமைச்சக‌ம் தகவல்!

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2008 (10:56 IST)
நமத ு நாட்டின் உணவு தானிய உற்பத்தி 2007-08-ம் ஆண்டில் இதுவரை கண்டிராத உயர் அளவாக 21 கோடியே 93 லட்சத்து 20 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மத்திய வேளாண் அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீடு தெரிவிக்கிறது.

அரிசி, சோளம், சோயாபீன், பருத்தி ஆகியவற்றின் உற்பத்தியும் இந்த காலத்தில் இதுவரை இல்லாத ஓர் உயர் அளவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

"2007-08- ம் ஆண்டில் 9 கோடியே 40 லட்சத்து 80 ஆயிரம் டன் அரிசியும், 7 கோடியே 48 லட்சத்து 10 ஆயிரம் டன் கோதுமையும், 3 கோடியே 60 லட்சத்து 90 ஆயிரம் டன் இதர உணவு தானியங்களும், ஒரு கோடியே 43 லட்சத்து 40 ஆயிரம் டன் பயறு வகைகளும், 2 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரம் டன் எண்ணெய் வித்துக்களும், 34 கோடியே 3 லட்சத்து 20 ஆயிரம் டன் கரும்பும் உற்பத்தியாகும ்" என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இத‌ன்பட ி 2006-07- ம் ஆண்டைவிட 2007-08-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 7 லட்சம் டன்னும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 30 லட்சம் டன்னும் பருத்தி உற்பத்தி 7.5 லட்சம் பேல்களும் கூடுதலாக இருக்கும்.

எண்ணெய் வித்துக்களில் நிலக்கடலை உற்பத்தி மட்டும் 72 லட்சத்து 90 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கான பந்தகால் நடும் விழாவே மாநாடு போல் அமைந்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சி!

மோசடி வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகியா? சில நிமிடங்களில் அளிக்கப்பட்ட விளக்கம்..!

கள்ள காதலி வீட்டில் மர்மான முறையில் இறந்த கள்ளக்காதலன் : போலீசார் விசாரணை!

வைகை நதியை சுத்தம் செய்ய பணம் கேட்டு நேரில் வந்து மிரட்டல்- மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் மதுரை ஆதீனம் பேச்சு!

Show comments