Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ஆரஞ்சு நாத்து அறிமுகம்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2008 (16:11 IST)
பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் நோய் தாக்குதல் இல்லாத புதிய ஆரஞ்சு பழ நாத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அதிக அளவு கோதுமை, நெல் பயிரிடப்படுகின்றன. அம்மாநில அரசு விவசாயிகள் மற்ற பணப் பயிர்களை விவசாயம் செய்வதற்கு ஊக்குவித்து வருகிறது.

webdunia photoWD
விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல், தொடர்நது வருவாய் தரும் ஆரஞ்சு பழத் தோட்டங்களை அமைக்க ஊக்கப்படுததி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் நோய் தாக்குதல் இல்லாத ஆரஞ்சு பழ நாத்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது பஞ்சாப் மாநிலத்தில் 30,976 ஹெக்டேர் பரப்பளவில் பழத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27,606 ஹெக்டேரில் ஆரஞ்சு பழத் தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்து 4 லட்சத்து 14 ஆயிரம் டன் ஆரஞ்சு பழங்கள் உற்பத்தியாகின்றன. இவை பெரும்பாலும் பெரேஜ்பூர், முகத்சார், பரிட்கோட், பதிந்தா, ஹொசியாபூர் ஆகிய மாவட்டங்களிலேயே உள்ளன. இதை மேலும் விரிவுபடுத்துவதற்கு தரமான, நோய் தாக்குதல் இல்லாத நாத்துக்கள் தேவை.

இந்த நாத்துக்கள் தேவையான அளவு கிடைக்காமல் இருப்பதே பஞ்சாப், அதன் அருகில் உள்ள மாநிலங்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது.

இந்த பிரச்சனையை தீர்க்கும் முயறசியில் பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் களம் இறங்கியது. இது 1999 ஆம் ஆண்டுகளில் நோய் தாக்காத ஆரஞ்சு பழ நாத்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

இது குறித்து பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைத ் துறை தலைவர் டாக்டர் ஜாஸ்பிர் சிங் ரன்தோவா கூறுகையில், நாங்கள் 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்து நோய் தாக்குதல் இல்லாத, ஒட்டு ஆரஞ்சு செடியை இறக்குமதி செய்தோம். பல்கலைக் கழகத்தின் பூச்சி தாக்குதல் இல்லாத பாதுகாப்பான தோட்டத்தில் 95 இறக்குமதி செய்யப்பட்ட ஒட்டு ஆரஞ்சு செடி வளர்க்கப்பட்டது.

இதில் இருந்து ஆரஞ்சு பதியங்கள் உருவாக்கப்பட்டன. இவை பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் கண்காணிப்பில் வளர்க்கப்பட்டன. இதற்காக பஞ்சாப் மாநில அரசு ஆரம்ப கட்ட நிதியாக ரூ.50 லட்சம் வழங்கியது. தற்போது இந்த துறை முழு அளவில் செயல்படுகிறது. வருடத்திற்கு 30 ஆயிரம் நோய் தாக்குதல் இல்லாத உயர் ரக செடிகள் வளர்க்கும் அளவிற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இங்கு 2002-03 ஆம் ஆண்டில் 2,600 ஆரஞ்சு பழ நாத்துக்களை விவசாயிகளுக்கு விநியோகித்தது. இது படிப்படியாக அதிகரித்து, இந்த வருடம் 30 ஆயிரம் நாத்து விநியோகிக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

இதை விரிவுபடுத்துவதற்காக மத்திய அரசு ரூ.1 கோடியே 83 லட்சம் நிதி வழங்கியுள்ளது. இதன் விரிவாக்கம் திட்டமிட்டபடி நடந்தால் கூடிய விரைவில் வருடத்திற்கு 1 லட்சம் ஆரஞ்சு நாத்துக்கள் விவசாயிகளுக்கு விநியோகிக்க முடியும். இங்கிருந்து விவசாயிகளுக்கு பிப்ரவரி, மார்ச், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் ஆரஞ்சு நாத்துக்கள் விநியோகிக்கப் படுகின்றன என்று டாக்டர் ஜாஸ்பிர் சிங் ரன்தோவா தெரிவித்தார்.

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments