Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,000 இல்லையேனில் நெல் பயிரிட மாட்டோம் : விவசாயிகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 31 டிசம்பர் 2007 (14:29 IST)
நெல்லுக்கு மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக ரூ.1,000 என அறிவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதிக்கு பிறகு நெல் பயிரிடுவதில்லை என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலையாக (அரசு கொள்முதல் வில ை) கோதுமைக்கு குவின்டாலுக்கு ரூ.1,000 என அறிவித்தது. இதே போல் நெல்லுக்கும் குவின்டாலுக்கு ரூ. ஆயிரம் என அறிவிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

இதற்காக ரயில் மறியல், சாலையில் நெல் கொட்டுவது உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை இது வரையிலும் ஏற்கவில்லை.

எனவே வருகின்ற ஜனவரி மாதம் முதல் நெல் பயிரிடுவதில்லை என்றும், அத்துடன் நிலவரி செலுத்துவதில்லை, வங்கியில் வாங்கிய பயிர் கடனை திருப்பி செலுத்துவதில்லை என்றும் விவசாயிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

தமிழ்நாடு தோட்ட பயிர்கள் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்த சங்கத்தின் தலைவர் புலியூர். ஏ.நாகராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத ு:

மத்திய அரசு நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.ஆயிரம் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதிக்கு பிறகு நெல் பயிரிடுவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் நில வரி, வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை திருப்பி செலுத்துவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்காக எல்லா விவசாய சங்கங்களும் பங்கேற்கும் ஒருங்கினைப்பு குழு அமைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

கர்நாடாக மாநிலத்தில் இருந்து காவேரி தண்ணீர் பெறும் உரிமையை சட்டபூர்வமானதாக ஆக்க தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகளை வேகப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை இந்த கூட்டம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
விவசா ய விளைபொருட்களுக்க ு கட்டுப்படியா ன வில ை கிடைக்காத காரணத்தினால் விவசாயிகள் பயிர் செய்வதை நிறுத்துவது பற்றிய ஆலோசனை சென்ற 14 ஆம் தேதி ஹைதராபாத்தில ் இந்தி ய விவசா ய சங்கங்களின ் கூட்டமைப்ப ு நடத்தி ய கருத்தரங்கில் முன ் வைக்கப்பட்டத ு.

அப்போது இந் த கூட்டமைப்பின ் பொதுச ் செயலாளர ் ப ி. செங்கள ் ரெட்ட ி கூறுகையில ், விவசாயிகளின ் பிரச்சனைக்க ு தீர்வ ு கா ண பயிர ் செய்யும ் மொத் த பரப்பளவில ் 10 விழுக்காட ு அள‌வி‌ற்க ு பயிர ் செய்யாமல ் இருப்பத ு. இதன ் மூலம ் விள ை பொருட்களின ் தேவைய ை அதிகரிக் க செய்வத ு என்ற ு தெரிவித்து இருந்தார்.

அப்போது பாரத ் ‌ விவசா‌யிக‌ள ் ச‌ங்க‌த ் தலைவர ் அஜ்மிர ் சிங ் லோங்வால ் செய்தியாளர்களிடம ் பேசுகையில ், 10 விழுக்காட ு பரப்பளவில ் பயிர ் செய்யாமல ் இருப்பத ு எங்களின ் எதிர்ப்ப ை காண்பிப்பதற்கா ன அடையா ள பூர்வமா ன போராட்டம ே. இத ை மற் ற விவசா ய சங்கங்களும ் ஏற்றுக ் கொண் ட பிறக ு அமல ் படுத்தப்படும ் என்ற ு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? கவலை வேண்டாம்! 14,104 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு!

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

48 வருஷத்துல இப்படி நடந்தது இல்ல.. சீமான் கண்ணியம் தவறிவிட்டார்! - பபாசி தலைவர் கருத்து!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு: கைதான 18 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து..!

Show comments