Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோதுமை, எண்ணெய் வித்து, பருப்பு வகைகளின் உற்பத்தி குறையும்!

Webdunia
செவ்வாய், 27 நவம்பர் 2007 (19:01 IST)
வறட்சியான பருவ நிலையால் இந்த வருடம் கோதுமை, எண்ணெய் கடுகு பயிரிடும் அளவு குறைந்துள்ளது. இதனால் அடுத்த வருடம் உணவு பொருட்கள், எண்ணெய் வித்து உற்பத்தி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்ற வருடத்தை விட, இந்த வருடம் கோதுமை பயிரிடுவது 1 லட்சம் ஹெக்டேருக்கும் குறைந்த அளவிற்கு நடந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் கோதுமை பயிரிடும் பகுதி குறைந்து விட்டது.

webdunia photoFILE
இதற்கு காரணம் பருவநிலை அதிக வெப்பமாக இருப்பதால் நிலத்தின் ஈரப்பதம் குறைந்து விட்டது. பருவ மழையும் 30 விழுக்காடு குறைவாக பெய்துள்ளது. இதனால் பயிர் பூ பூக்கும் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விளைச்சல் குறையும். கோதுமை உற்பத்தி குறைவதால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதால் பல பகுதிகளில் விதைப்பு நடைபெறவில்லை.

இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் நீர் பாசனத்திற்கு மழையை நம்பியுள்ள கோதுமை பயிரிடப்படும் பகுதிகளில் அக்டோபர் 25 ந் தேதி முதல் நவம்பர் 10 ந் தேதிக்குள் விதைப்பு நடைபெற்றால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும். அதே போல் பாசன வசதி உள்ள பகுதிகளில் நவம்பர் 10 ந் தேதி முதல் டிசம்பர் 25 ம் தேதி வரை விதைப்பு நடைபெற்றால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும். அதற்கு பிறகு விதைத்தால் சரியான மகசூல் கிடைக்காது. இதனால் விவசாயிகள் இந்த நாட்களை மிக முக்கியமான நாட்களாக கருதுகின்றனர். இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திர பிரதேசம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் கோதுமைக்கான விதைப்பு முடிக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

மத்திய விவசாய அமைச்சகம் வெளியிட்டுள்ள விபரப்படி, கோதுமை இயக்குநகரத்தின் புள்ளி விபரத்தில் சென்ற வாரம் வரை 53 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் மட்டுமே கோதுமை விதைப்பு நடைபெற்றுள்ளது. சென்ற வருடம் இதே கால கட்டத்தில் 63 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் விதைப்பு முடிந்திருந்தது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தராஞ்சல் ஆகிய மாநிலங்களில் விதைப்பு காலதாமதமாகி வருகிறது.

ஹரியானாவில் 17 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேரிலும் (சென்ற வருடம் 18 லட்சம் ஹெக்டேர ்) மத்திய பிரதேசத்தில் 13 லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேரிலும் (சென்ற வருடம் 21.15 லட்சம் ஹெக்டேர ்), உத்தர பிரதேசம் 12 லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 21.50 லட்சம் ஹெக்டேர ்), ராஜஸ்தான் 2 லட்சத்து 49 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 6.69 லட்சம் ஹெக்டேர ் ), மகாராஷ்டிரா 3 லட்சத்து 21 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 4.59 லட்சம் ஹெக்டேர ்), குஜராத் 1 லட்சத்து 80 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 4 லட்சம் ஹெக்டேர ்), கர்நாடகா 1 லட்சத்து 36 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 1.78 லட்சம் ஹெக்டேர ் ) மட்டுமே விதைப்பு நடைபெற்று உள்ளது.

இதில் சிறிது ஆறுதல் அளிக்கும் விஷயம் பஞ்சாப் மாநிலத்தில் பாசன வசதி இருப்பதால், இந்த மாநிலத்தில் மட்டும் கூடுதலாக 1 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விதைப்பு நடைபெற்றுள்ளது. இங்கு 26 லட்சத்து 18 ஆயிரம் ஹெக்டேரில் விதைப்பு நடைபெற்றுள்ளது. (சென்ற வருடம் 25.04 லட்சம் ஹெக்டேர ்)

உத்தர பிரதேச மாநிலத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு வெட்டுவதற்கு குறிப்பிட்ட நாட்களில் கரும்பு அனுமதி வழங்கவில்லை. இதனால் கரும்பு வெட்டி அதற்கு பிறகு கோதுமை பயிர் செய்வது தாமதமாகியது. இதனால் கோதுமை பயிரிடும் பரப்பளவு குறைந்தது.

நிலத்தின் ஈரப் பதம் குறைவாக இருப்பதால் எண்ணெய் கடுகு, கடலை பயிர் செய்யும் பரப்பளவு குறைந்துள்ளது. சென்ற வருடம் ரபி பருவத்தில் எண்ணெய் கடுகு 57 லட்சத்து 58 ஆயிரம் ஹெக்டேரில் பயிர் செய்யப்பட்டது. இந்த ரபி பருவத்தில் 42 லட்சத்து 44 லட்சமாக குறைந்து விட்டது.

இந்த வருடம் எண்ணெய், கடுகு ராஜஸ்தானில் 20 லட்சத்து 13 ஆயிரம் ஹெக்டேரிலும், (சென்ற வருடம் 27.78 லட்சம் ஹெக்டேர ் ), மத்திய பிரதேசத்தில் 3 லட்சத்து 99 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 6.26 லட்சம் ஹெக்டேர ்), உத்தர பிரதேசம் 6 லட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 6.93 லட்சம் ஹெக்டேர ்), ஹரியானா 5 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 5.97 லட்சம் ஹெக்டேர ்), குஜராத் 2 லட்சத்து 94 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 3.32 லட்சம் ஹெக்டேர ் ) பரப்பளவில் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் சூரியகாந்தி 6 லட்சத்து 82 ஆயிரம் ஹெக்டேரிலும் (சென்ற வருடம் 8.10 லட்சம் ஹெக்டேர ் ), நிலக்கடலை 2 லட்சத்து 12 ஆயிரம் ஹெக்டேரிலும் (சென்ற வருடம் 2.60 லட்சம் ஹெக்டேர ் ), சாப்புளவர் 2 லட்சத்து 59 ஆயிரம் ஹெக்டேரில் (சென்ற வருடம் 2.92 லட்சம் ஹெக்டேர ் ) மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துக்கள் மேம்பாடு இயக்குநரகத்தின் தகவல் படி, எண்ணெய் கடுகு சென்ற வருடம் பயிர் செய்த பரப்பளவுடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் 60 விழுக்காடு பரப்பில் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது. சென்ற வருடத்தை விட ராஜஸ்தானில் 10 லட்சம் ஹெக்டேர், உத்தர பிரதேசத்தில் 1 லட்சம் ஹெக்டேர், மத்திய பிரதேசத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் குறைவாக கடுகு எண்ணெய் பயிர் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் பருப்பு வகைகள் பயிர் செய்யும் பரப்பளவும் குறைந்து விட்டது. சென்ற வருடம் ரபி பருவத்தில் 79 லட்சத்து 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டன. இது இந்த வருடம் 78 லட்சத்து 88 ஆயிரம் ஹெக்டேராக குறைந்து விட்டது.

துவரை 7 லட்சத்து 66 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 9.21 லட்சம் ஹெக்டேர ் ), பட்டாணி 4 லட்சத்து 34 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 4.77 லட்சம் ஹெக்டேர ் ) கொள்ளு 3 லட்சத்து 83 ஆயிரம் ஹெக்டேர் (சென்ற வருடம் 4.34 லட்சம் ஹெக்டேர ்) பரப்பளவில் மட்டுமே பயிர் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உளுந்து, பயத்தம் பருப்பு பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது. உளுந்து பயிரிடும் பரப்பளவு 1 லட்சத்து 73 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 3 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராகவும், பயத்தம் பருப்பு பயிரிடும் பரப்பளவு 67 ஆயிரம் ஹெக்டேரில் இருந்து 1 லட்சத்து 48 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

ஆனால் பார்லி 40 விழுக்காடு பருப்பு வகைகள் 2 லட்சம் ஹெக்டேர் தானிய வகைகள் 4 லட்சம் ஹெக்டேர் பரப்பில் குறைவாக பயிர் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நெல், கோதுமை போன்ற உணவு தானியம், பருப்பு வகைகள், நவதானியம், எண்ணெய் வித்துக்கள் உள்நாட்டின் தேவைக்கும் குறைவாக இருக்கின்றது. பற்றாக்குறையை ஈடுகட்ட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்த ரபி பருவத்தில் இவைகள் பயிரிடும் பரப்பளவே குறைந்துள்ளதால், அடுத்த வருடம் சமையல் எண்ணெய், பருப்பு, நவதானியம் ஆகியவை அதிகளவு இறக்குமதி செய்ய வேண்டியதிருக்கும்.

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments