Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவானிசாகர் அணையில் மீன்பிடி‌ப்பு பாதிப்பு

-ஈரோடு

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (11:50 IST)
பவானிசாகர் அணை தற்போது முழுகொள்ளவு எட்டியுள்ளதால் மீன்பிடிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

webdunia photoWD
சத்தியமங்கலம் அடுத்துள்ளது பவானிசாகர் அணை ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து அணை நிரம்பியது, இதையடுத்து ஆகஸ்ட்டு, செப்டம்பவர், அக்டோபர் மற்றும் நவம்பர் என தொடர்ந்து ஐந்து மாதங்கள் அணையின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டி சாதனை படைத்தது.

இது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் மீனவர்களுக்கு பெரும் சோத்ததை தந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் வரை அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்த காரணத்தால் அணையின் நீர்தேக்கத்தில் மீன்பிடிப்பு தொழி‌ல் ந‌ன்கு நடைபெற்று வந்தது. இந்த சமயத்தில் நாள் ஒன்றுக்கு 1 டன் மீன்களுக்கு மேல் கிடைத்தது.


ஆனால் கடந்த நான்கு மாதங்களாக நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 600 டன் மீன்வரை மட்டுமே கிடைக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் பகுதியில் மீன்களு‌க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அணையில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது மீன்கள் ஆழத்தில் சென்றுவிடுவதால் வலையில் சிக்குவதில்லை. தண்ணீர் குறைவாக இருக்கும் சமயத்தில் மீன்கள் சாதாரணமாக வலையில் மாட்டிக்கொள்ளும்.

தற்போது பவானிசாகர் பகுதியில் பல்வேறு மீனவர்கள் வேறு தொழில்நோக்கி வெளியூர்களுக்கு சென்றுள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டுல அறிவிக்கப்படாத எமெர்ஜென்சிய கொண்டு வந்துட்டீங்களா? - மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கேள்வி!

ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 360 ரூபாய் குறைவு..!

600 காளைகள், 320 மாடுபிடி வீரர்கள்.. முதல் ஜல்லிக்கட்டு தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

தென் மாவட்டங்களுக்கு பொங்கல் சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..

விக்கிரவாண்டியில் பள்ளி குழந்தை உயிரிழந்த சம்பவம்: தாளாளர் உட்பட 3 பேர் கைது

Show comments