Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் விலை உயர்த்த வேண்டும் : பாலு!

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2007 (16:30 IST)
நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி. ஆர். பாலு மத்திய விவசாய அமைச்சர் சரத் பவாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் மத்திய விவசாய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :

சமீபத்தில் பெய்த மழையால் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கரீப் பருவத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.ஆயிரமாக உயர்த்துவது அவசியம்.

நெல் கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் நேரத்தில் தமிழக அரசு உட்பட பல மாநில அரசுகள் நெல் கொள்முதலுக்கு வழங்கப்படுமம் போனஸ் உட்பட கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் பரிந்துரைத்தன.

இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, கொள்முதல் விலையுடன் குவிண்டாலுக்கு ரூ.50 போனஸாக அளிப்பதாக அறிவித்தது.

தமிழக முதல்வர் கருணாநிதி , தமிழகத்தில் பல பகுதிகளில் பெய்த மழையாலும், அத்துடன் நெல் உற்பத்தியின் இடு பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாலும் இந்த கொள்முதல் விலை கட்டுப்படியாகா கூடியதல்ல என்று மத்திய அரசுக்கு தெரிவித்தார்.

கோதுமை உற்பத்தி செலவை விட, நெல்லுக்கான உற்பத்தி செலவு அதிகம். நெல்லுக்கு உயர்த்தியுள்ள கொள்முதல் விலை கோதுமையை விட குறைவாக இருக்கின்றது..

தமிழகத்தில் சமீபத்தில் பெய்த மழையால் நெல் பயிரிடம் மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பருவத்தில் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ. 1,000 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் பாலு கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்திர பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து.! சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

தி.மு.க. ஆட்சியில் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.! அண்ணாமலை காட்டம்..!!

ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையா? சசிகலா கண்டனம்..!

ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் பேரிழப்பு: ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து உதயநிதி..!

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

Show comments