Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் விலை அதிகரிக்கும்? மத்திய அரசு ஆலோசனை!

Webdunia
வெள்ளி, 26 அக்டோபர் 2007 (18:37 IST)
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் நெல் விலையை உயர்த்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறத ு.

கடந்த 9-ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரை குழு நெல் கொள்முதல் விலையை அறிவித்தத ு. இதன்படி சன்ன ரக நெல் குவின்டாலுக்கு ர ூ.675 ம ், மற்ற ரக நெல்லுக்கு குவின்டால் ர ூ.654 என அறிவித்தத ு. இத்துடன் போனசாக குவின்டாலுக்கு ர ூ.50 வழங்கப்படும் எனவும் அறிவித்தத ு.

இதன்படி இந்திய உணவுக் கழகம ், தமிழ்நாடு நுகர்வோர் பொருள் வாணிபக் கழகம் ஆகியன கொள்முதல் செய்யும் சன்ன ரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ர ூ.-725 ம ், மற்ற ரக நெல்லுக்கு ர ூ.695- ம் வழங்கப்படும ்.

ஆனால் கோதுமைக்கான கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ர ூ. ஆயிரம் என அறிவித்தத ு.

இதே போல் நெல்லுக்கான கொள்முதல் விலையையும் உயர்த்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள ், விவசாய சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடப்பட்டத ு.

இந்த விலை கட்டுப்படியாகாது என்றும ், கோதுமைக்கு சமமாக நெல்லுக்கும் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ர ூ.1000 ஆக உயர்த்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும ், பாரதிய ஜனதா கட்சி தலைவருமான எல ். க ே. அத்வானி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சென்ற வாரம் கடிதம் எழுதினார ்.

இதே போல் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார ். தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நெல்லுக்கான கொள்முதல் விலையை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர ்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம ், பாரதிய ஜனத ா, தெலுங்கான ராஷ்டிரிய சமீத ி, இந்திய கம்யூனிஸ்ட் கட்ச ி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும ், தொண்டர்களும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர ்.

இந்நிலையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நெல் கொள்முதல் விலை பிரச்சனை விவாதத்திற்கு வந்தத ு.

இதில் நெல் கொள்முதல் விலையை அதிகரிப்பது பற்றி நிதி அமைச்சர் ப. சிதம்பரம ், விவசாய அமைச்சர் சரத் பவார் ஆகிய இருவரும ், திட்டக் குழுவின் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியாவுடன் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும ். இவர்கள் நெல்லுக்கு கொள்முதல் விலையாக எவ்வளவு வழங்கலாம் என்பதை முடிவு செய்த ு, மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறத ு.

இவர்கள் மூவரும் வருகின்ற 31-ஆம் தேதி சந்தித்து பேசி நெல் கொள்முதலுக்கான விலையை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை குழுவுக்கு அனுப்பி வைப்பார்கள் என தெரிகிறத ு.

இந்திய உணவு கழகம் உட்பட அரசு அமைப்புக்கள் கோதுமை கொள்முதல் செய்யும் அளவு குறைந்தத ு. இதனால் பொது விநியோக திட்டம ், மற்றும் வேலைக்கு உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் கோதுமையின் அளவு குறைந்தத ு.

அத்துடன் மத்திய அரசு கோதுமையை வெளிநாட்டில் இருந்து குவின்டால் ர ூ.1,400 என்ற விலையில் இறக்குமதி செய்தத ு. இதற்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியத ு.

இதனடிப்படையில் கோதுமைக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு 1 டன் ர ூ.1,000 என உயர்த்தி அறிவித்தத ு.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சன்னரக நெல் கொள்முதல் விலைக்கும ், கோதுமைக்கான கொள்முதல் விலைக்கும் வேறுபாடு குவின்டாலுக்கு ர ூ.50 மட்டுமே இருந்தத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் ஓட்டுனர்களை சந்தித்து குறைகள் கேட்ட ராகுல் காந்தி.. இந்த யோசனை யாருக்கும் வரவில்லையே..!

இளநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு..!

சரணடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை..! வி.சி.க. - காங்கிரஸ் குற்றச்சாட்டு.!!

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திருமாவளவன் கண்டனம்..! குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரிக்கை..!!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. கமல்ஹாசன் இரங்கல்..!

Show comments