Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் : அத்வானி!

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2007 (19:52 IST)
மத்திய அரசு நெல் கொள்முதல் விலையை குவின்டாலுக்கு ர ூ.1000 ஆக உயர்த்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும ், ப ா. ஜனதா கட்சி தலைவருமான எல ். க ே. அத்வானி கூறியுள்ளார ்.

இது சம்பந்தமாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சனிக்கிழமையன்று எழுதியுள்ள கடிதத்தில் அத்வானி கூறியிருப்பதாவத ு:

நெல் உற்பத்தி செலவுக்கும ், அரசு கொளமுதல் செய்யும் விலைக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்ற கருத்து விவசாயிகள் மத்தியில் உள்ளத ு. இதனால் விவசாயிகள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறத ு. குறிப்பாக தென் மாநில விவசாயிகள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறத ு.
அவர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கோதுமை விவசாயிகளுடன் ஒப்பிடுகையில் நெல் விவசாயிகளிடம் பாராபட்சமாக நடந்து கொள்கிறது என்ற நினைக்கின்றனர ்.

பல விவசாய சங்கங்கள் தன்னிடம் கடந்த சில ஆண்டுகளாக நெல் உற்பத்தி செய்வதற்காக தேவைப்படும் உரம ், பூச்சி மருந்த ு, ஆட்கள் கூல ி, நீர் பாசன செலவ ு, மின்சார கட்டணம ், போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரித்து விட்ட ன. ஆனால் இந்த உற்பத்தி செலவுக்கும் குறைவாக நெல் கொள்முதல் விலை உள்ளது என்று என்னை அணுகி தெரிவித்த ன.

கோதுமை கொள்முதல் விலையை அதிகரித்திருப்பது பாராட்டுக்குறியத ு. அதே நேரத்தில் நெல் விவசாயிகளின் பிரச்சனையிலும் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார ்.

அத்துடன் அவர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கரும்பு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை அனைவரின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக ஆந்திராவில் இருந்து டெல்லிக்கு நான்கு விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார ்.

தெலுங்கான பகுதியில் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும ். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும ்.
இந்த பகுதியில் குறிப்பிட்ட கால வரையறுக்குள் பாசன வசதிகளை ஏற்படுத்த வேண்டும ். விவசாய விளை பொருட்களின் விலை குறையும் போத ு, விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நிதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் அத்வானி குறிப்பிட்டுள்ளார ்.















எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

பிரான்ஸ் ​​AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!

ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!

Show comments