Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் பல்கலை கண்டுபிடித்துள்ள மூலிகை டீசல்!

Webdunia
ஜாட்ரோஃபா எனும் கொட்டையைப் பயன்படுத்தி மூலிகை டீசலை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்!

ஜாட்ரோஃபா எனும் தாவரத்தின் வேர் பகுதியில் உள்ள கொட்டைகளை எடுத்து அதனை பிழிந்து எடுக்கப்படும் சாருடன் மெத்தனால் எனும் இரசாயனப் பொருளை ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் கலந்த பிறகு இரண்டு மணி நேரம் தொடர்ந்து கலக்கிய பிறகு அதில் உள்ள கிளைசரால் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் தங்கும் திரவப் பொருள் டீசலைப் போலவே மிகச் சிறந்த வாகன எரிபொருளாகிறது.

இந்த புதிய வாகன எரிபொருளை மூலிகை டீசல் என்று கூறிய முனைவர் பி.வி. வெங்கடாச்சலம ், இதன் தயாரிப்புச் செலவு லிட்டருக்கு 16 ரூபாய் ஆகிறது என்றும ், ஒரு நாளைக்கு 250 லிட்டர்கள் வரை தாங்கள் வடிவமைத்துள்ள உபகரணத்தின் வாயிலாக தயாரிக்க முடியும் என்று கூறினார்.

இதனுடைய துணைப் பொருளாக கிடைக்கும் எண்ணெய் பின்னாக்கு மிகச் சிறந்த உரம் என்றும ், கிளைசரால் சோப்பு தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த ஜாட்ரோஃபா தாவரம் அமெரிக்காவைச் சேர்ந்தது என்றும ், இதனை போர்ச்சுகீசிய ஏற்றுமதியாளர்கள் உலகின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு சென்றனர் என்றும் முனைவர் வெங்கடாச்சலம் கூறினார்.

மலைப் பிரதேசங்களில் 1,400 மீட்டர்களுக்கும் உயரமான பகுதிகளில் மிகக் குறைந்த மழையளவு உள்ள காய்ந்த இடங்களில் இந்த தாவரம் மிக அதிகமாக வளரக்கூடியது என்று கூறிய வெங்கடாச்சலம ், இத்தாவரத்தின் கொட்டையில் இருந்து 46 முதல் 58 விழுக்காடு வரை எண்ணெய் போன்ற திரவத்தை எடுக்கமுடியும் என்றும ், அதிலிருந்து 30 முதல் 35 விழுக்காடு எரிபொருள் தயாரிக்க முடியும் என்றும் கூறினார்.

இத்தாவரத்தை முறையாக பயிர் செய்தால் 50 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து விளைச்சலை பெறமுடியும் என்றும் வெங்கடாச்சலம் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.. ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அன்புமணி..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! தமிழக முதல்வருக்கு இபிஎஸ் கண்டனம்..!

ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை.! சென்னையில் சில இடங்களில் கடைகள் அடைப்பு.! மருத்துவமனை முன்பு பதற்றம்.!!

தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை..! சென்னையில் பதற்றம்..!!

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

Show comments