Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டி.ஆர்.பாலு வெற்றி! மணிசங்கர் ஐயர் தோல்வி!

டி.ஆர்.பாலு வெற்றி! மணிசங்கர் ஐயர் தோல்வி!
, சனி, 16 மே 2009 (15:03 IST)
மயிலாடுதுறை தொகுதியி்ல் போட்டியிட்ட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான மணிசங்கர் ஐயர் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட அஇஅதிமுக வேட்பாளர் ஓ.எஸ். மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். துவக்கத்தில் முன்னணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரும் முன்னாள் இரயில்வே அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி தோல்வியடைந்தார்.

கடைசியாக கிடைத்த தகவலின்படி, சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தன்னை எதிர்த்து போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பனை விட 2,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil