Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டீஷ் தூதரகம் நடத்தும் உயிரி தொழில்நுட்பக் கருத்தரங்கு!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (17:54 IST)
பிரிட்டீஷ் தூதரகமும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து உயிரி தொழில்நுட்பம் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கை சென்னையில் நடத்தவுள்ளன.

சென்னை பிரிட்டீஷ் தூதரகமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உயிரி தொழில் நுட்ப மையமும் இணைந்து வரும் 17, 18 ஆம் தேதிகளில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகான்ந்தா அரங்கில் இதை நடத்தவுள்ளன.

' உயிரி தொழில்நுட்பம்: பிரிட்டன், இந்தியா பார்வை' என்ற தலைப்பில் நடைபெறும் இக்கருத்தரங்கில் உயிரி தொழில்நுட்பத்துறையின் தற்போதைய போக்கு, முன்னேற்றங்கள், அத்துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து கலந்தாலோசிக்கப்படும்.

பிட்டனில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறிவியலார்கள், இந்திய அறிவியலார்கள், தொழிற்துறை வல்லுனர்கள் என பலதரப்பட்டோர் பங்கேற்று சுகாதாரம், உணவு, மரபியல், ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளில் உயிரி தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து சிறப்புரையாற்ற உள்ளனர்.

உயிரி தொழில்நுட்பப் பட்டதாரிகள், பட்டம் படித்து வருவோர் மற்றும் கல்வியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடிய இக்கருத்தரங்கில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் பங்கேற்ப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.அண்ணாயுனிவ்.இடியூ) உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, 'துறைத் தலைவர், உயிரி தொழில்நுட்ப மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600 025' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் “HOD, Department of Biotechnology, Anna University” என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் ரூ. 400-க்கு வங்கி வரைவோலை எடுத்து, வரும் 14 ஆம் தேதிக்குள் அணுப்ப வேண்டும்.

இதுகுறித்த மேலும் விவரங்களை அறிய 044 - 4205 0600 (பிரிட்டீஷ் கவுன்சில்) என்ற தொலைபேசி எண்ணையோ, அல்லது அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில் நுட்பத்துறையையோ அணுகலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து! அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளால் மக்கள் அதிர்ச்சி!

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து எம்.எல்.ஏக்கள் திடீர் விலகல்! - அதிர்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால்!

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பெண்களை மிரட்டிய சம்பவம்.. கைது செய்யப்பட்டவர்களுக்கு அரசியல் தொடர்பா? காவல்துறை விளக்கம்

Show comments