சென்னையில் யு.எஸ். பல்கலை கல்விக் கண்காட்சி!

Webdunia
அமெரிக்கா - இந்தியா கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.இ.எப்.) மற்றும் அமெரிக்காவின் லிண்டேன் கல்வி சேவைகள் அமைப்பு ஆகியன இணைந்து லிண்டேன் அமெரிக்க பல்கலைக்கழக கல்விக் கண்காட்சியை வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடத்துகிறது.

சென்னை நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெறும் இக்கண்காட்சி, பிற்பகல் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் 1 மணி முதல் 2 மணி வரை அமெரிக்காவில் பட்டப்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற நேரங்களில் ஆராய்ச்சிப் படிப்பு, முதுகலைப் படிப்பு படிக்க விரும்புவோர் உள்ளிட்ட மற்றவர்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம்.

கல்விக் கண்காட்சிக்குப்பின் அமெரிக்காவில் உள்ள 24 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்ச் சேர்க்கை தொடர்பான அதிகாரிகளை சந்தித்து கூடுதல் விவரங்களைக் கேட்டுப் பெறலாம்.

இதுகுறித்த மேலும் விவரங்களை டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ. லிண்டேன்டூர்ஸ்.காம் என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொடைக்கானல் டூர் போறீங்களா?!.. இத தெரிஞ்சிக்கோங்க!.. இனிமே எல்லாம் ஆன்லைன்தான்!.

பொங்கல்: ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு கட்டணம்!.. பயணிகள் அதிர்ச்

பராசக்தியையே தடை பண்ணல.. ஜனநாயகன் ஏன்?!.. குஷ்பு பேட்டி!..

பல வருஷத்துக்கு தேவையான எண்ணெய்!.. வெனிசுலாவை அமெரிக்கா டார்கெட் செய்ய காரணம்!....

போரூர் - வடபழனி மெட்ரோ இரயில் தடத்தில் சோதனை ஓட்டம் வெற்றி.. எப்போது ஆரம்பம்?

Show comments