Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டத்துறையில் அயல் அலுவலக பணி வாய்ப்பு!

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2007 (19:29 IST)
அமெரிக்காவில் உள்ள வழக்கறிஞர் நிறுவனங்கள ், அதன் சட்ட சம்பந்தமான பணிகள ை, இந்தியாவில் கொடுத்து அயல் பணியாக ( BPO) செய்துகொள்ளத் துவங்கியுள்ள ன.

அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் உள்ள வர்த்த க, தொழில் நிறுவனங்கள ், வங்கிகள் போன்றவ ை, அவற்றின் அலுவலக பணிகளை இந்தியா போன்ற நாடுகளில் இணையத் தொடர்பு வழியாக கொடுத்து செய்கின்ற ன.

இந்தியா போன்ற நாடுகளில் படித்த திறமையான இளைஞர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைகளை செய்கின்றனர ். அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் குறிப்பிட்ட வேலையை செய்ய வேண்டும் என்றால் 200 முதல் 300 டாலர் வரை செலவாகும ். ஆனால் அதே வேலையை இந்தியாவில் செய்ய 30 டாலர்களே செலவழித்தால் போதும ்.

இதனால் மேலை நாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளை நாடி வருகின்ற ன.

இது போன்ற பணிகளை செய்து கொடுக்கும் நிறுவனங்கள் அயல் அலுவலக பணி ( பிசினஸ் ஃப்ராசஸ் அவுட் சோர்சிங் - BPO) என்று அழைக்கப்படுகிறத ு. இப்போது இந்திய அயல் பணி நிறுவனங்கள் வங்க ி, நுகர்வோர் குற ை, கடன் வழங்கும் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளில் செய்து கொடுக்கின்ற ன.

இப்போது இந்த அயல் அலுவலக பணியை செய்வதற்கு சட்டம ், நீதிமன்றம் ஆகிய துறைகளில் அதிகளவு வாய்ப்பு ஏற்பட்டுள்ளத ு. இதற்கு காரணம் இந்தியாவில் சட்டம் படித்த பட்டதாரிகள் அதிகளவு இருக்கின்றனர ். அத்துடன் நீதிமன்றங்களில் தேவைப்படும் ஆங்கில புலமையும் இருக்கின்றத ு.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அமெரிக்க சட்ட சேவை நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ள ன. ஏற்கனவே பரிசோதனை முயற்சியாக சில நிறுவனங்கள் சட்டம ், நீதித்துறை பணிகளை இந்தியாவில் கொடுத்த ன. இப்போது அதிகளவு நிறுவனங்கள ், அதன் சட்டம ், நீதிமன்றம் சார்ந்த பணிகளை அயல் அலுவலக பணி முறையில ், இந்தியாவில் கொடுக்க துவங்கியுள்ள ன. இதனால் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளத ு.

இத்துறையில் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு வழக்கு சம்மனை தயாரிப்பத ு, இதே போன்ற வழக்கில் முந்தைய தீர்ப்பு நகலை தேடி கொடுப்பத ு, வழக்குக்கு தேவையான துணை ஆவனங்கள ், வழக்கை ஆய்வு செய்வத ு, சட்ட விளக்கம் உட்பட நீதித்துறைக்கு தேவையான பணிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளத ு.


சர்வதேச அளவில் சட்டத்துறை பணிகள் மற்ற நாடுகளில் கொடுத்து செய்யப்படுகின்ற ன. இது தற்போது மொத்த பணியில் மூன்று முதல் நான்கு விழுக்காடு வரை உள்ளத ு. இது 2010 ஆம் ஆணடில் 7 விழுக்காடாக அதிகரிக்கும ். இதன் மதிப்பு 2,500 லட்சம் டாலராக இருக்கும் என்று ஒரு ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளத ு.

தற்போதைய நிலவரப்படி 200 அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி சட்ட நிறுவனங்கள் ( வழக்கறிஞர் அலுவலகங்கள் ) அவைகளின் பணியை வெளிநாடுகளில் அயல் அலுவலக பணியாக கொடுத்து செய்து கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ள ன.

தற்போது ஆபிஸ் டைகர ், இன்டலிவேட ், பிரிசம ், கோமட் ஆகிய நிறுவனங்கள் சட்டத்துறையின் அயல் அலுவலக பணியை செய்து கொடுக்கின்ற ன.

இதில் சட்டம் படித்த பட்டதாரிகளுக்கு மட்டும் இல்லாமல் பொறியியல் பட்டதாரிகளுக்கும் காப்புரிமை பணிகளை செய்து கொடுக்கும் வாய்ப்பு அதிகளவு உள்ளத ு.

இந்திய காப்புரிமை ( பேட்டண்ட் ) ஆணையத்தில் 600 காப்புரிமை முகவர் அலுவலகங்கள் பதிவு செய்து கொண்டுள்ள ன. அத்துடன் 300 அறிவுசார் சொத்துரிமையை பதிவு செய்யும் அலுவலகர்கள் இருக்கின்றனர ். தற்போது இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்கா மற்றம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு காப்புரிமை பணியை செய்து கொடுக்கின்றனர ்.

இந்த எண்ணிக்கை 2010 ஆம் ஆண்டில் 1,800 முதல் 2,000 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளத ு.

அமெரிக்க ா, பிரிட்டன ், பிரான்ஸ ், ஆஸ்ட்ரேலிய ா, தென்கொரிய ா, ஜப்பான ், சீனா ஆகிய நாடுகள ், தங்களின் சட்டம் சார்ந்த பணிகள ை, மற்ற நாடுகளில் கொடுத்து அயல் அலுவலக பணி முறையில் செய்து கொள்கின்ற ன.

பொறியியல் படித்த பட்டதாரிகள் காப்புரிமை பணியில ், காப்பிரிமைக்கு விண்ணப்பிக்கும் நிறுவனத்தின் கண்டுபிடிப்பு பொருளுக்கு போன்ற ு, மற்ற நிறுவனங்கள் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளதா என்று ஆய்வு செய்வத ு, காப்புரிமை விண்ணப்பம் தயாரிப்பத ு, விண்ணப்பத்தில் இணைக்கும் ஆவணங்களை தயாரிப்பத ு, தொழில்நுட்ப தகவல்கள் உட்பட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளத ு.

இது போன்ற சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த பணிகளை மற்ற வெளிநாடுகளுக்கு அயல் அலுவல் பணி முறையில் வழங்கும் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான லாஸ்கிரிப் இன்கார்பரேடட் நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அலுவலருமான குனூர் சோப்ரா கூறியதாவது :

“அமெரிக்காவில் ஒரு சட்டத்துறை சார்ந்த பணி செய்ய 200 முதல் 300 டாலர் வரை செலவாகும ். அதே வேலையை இந்தியாவில் 30 டாலருக்குள் செய்து முடித்து விடலாம ். இதனால் எங்களுக்கு 90 விழுக்காடு செலவு மிச்சமாகிறத ு.

மற்ற நாடுகளை விட இந்தியாவை விரும்பக் காரணம ். ஊழியர்களின் சம்பளம் குறைவ ு, ஆங்கில மொழித் திறன ், இங்கு சட்டத்துறை சார்ந்த படிப்புக்கும் மற்ற நாடுகளில் உள்ளவைகளுக்கும் அதிகளவு ஒற்றுமை இருப்பத ே.

இப்போது இந்தியாவில் உள்ள எங்கள் அலுவலகம் குர்கானில் உளளத ு. இதில் 85 பேர் பணியாற்றுகின்றனர ். இதை அடுத்த வருடத்திற்குள் 300 பேராக அதிகரிக்கப் போகின்றோம ். நாங்கள் லூதியான ா, ஜெய்ப்பூர ், சண்டிகார ், டேராடூன் உட்பட பல நகரங்களில் அலுவலகம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம ்.

இப்போது இந்த துறையில் பணியில் சேருபவர்கள் குறுகிய காலத்திலேயே மற்ற நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர ். இந்த போக்கை தடுத்து நிறுத்த ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நித ி, நிறுவனத்தின் பங்குகளை வழங்குதல் போன்றவற்றை செய்து கொடுக்க உள்ளோம ் ” என்று அவர் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு இடைத்தேர்தல்: போட்டியா? புறக்கணிப்பா? - 11ம் தேதி அதிமுக கூட்டம்!

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி.. டெல்லி தேர்தலுடன் அறிவிப்பு வெளியீடு..!

ஒரே நேர்கோட்டில் வெள்ளி, சனி, வியாழன், செவ்வாய்! அரிய வானியல் நிகழ்வு! எங்கே எப்போது காணலாம்?

அதிகரிக்கும் HMPV தொற்று.. சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடா? - நீலகிரி கலெக்டர் விளக்கம்!

Show comments