Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவத் தேர்வுகள் 11ல் துவக்கம்

Webdunia
சனி, 7 பிப்ரவரி 2009 (11:45 IST)
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் 11ஆம் தேதி துவங்கும் என்று துணை வேந்தர் மீர் முஸ்தபா ஹ ¥சேன் கூறினார்.

இலங்கை தமிழர் பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம், போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டதை அடுத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளையும் விடுதிகளையும் காலவரையின்றி மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக மற்றும் அண்ணா பல்கலைக்கழக மதுநிலை படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

இந்த நிலையில் மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளை வரும் 9ஆம் தேதி மீண்டும் திறக்க மறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் ஒத்த ி ¨க்கப்பட்ட தமிழ்நாடு டாக்டர எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளின் தேர்வுகள் வரும் 11ஆம் தேதி துவங்குகிறது.

தேர்வு அட்டவணைகள் டபிள்யுடபிள்யுடபிள்யு.டிஎன்எம்எம்யு.ஏசி.இன் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் மீர் முஸ்தபா ஹ ¥சேன் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் 13, 14ஆம் தேதிகளில் நடக்கும் என்று துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொங்கல் விடுமுறை.. சென்னையில் 3 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

யார் முதலில் பாடுவது? சொர்க்கவாசல் திறப்பில் சண்டை போட்ட வடகலை - தென்கலை பிரிவினர்..!

திருப்பதியில் கூட்ட நெரிசலால் 6 பேர் பலி.. மன்னிப்புக் கோரிய துணை முதல்வர் பவன் கல்யாண்!

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

Show comments